[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்
  • BREAKING-NEWS வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
  • BREAKING-NEWS தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS பட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.

போலீஸ் வீடுகளை குறிவைத்து திருடிய வாலிபர் - எப்படி சிக்கினார் தெரியுமா?

mumbai-20-year-old-obsessed-with-robbing-cops-finally-caught

மும்பை ஜிடிபி நகரைச் சேர்ந்தவர் கமல்ஜித் சிங் (20). இவர் போலீஸ் வீடுகளை குறித்து தொடர்ச்சியாக திருடி வந்துள்ளார். போலீஸ் குடியிருப்புகளில் பாதுகாப்பு இருக்காது என்பதாலும், போலீஸ் வீடுகளில் யார் பூட்டை உடைத்து திருடப்போகிறார்கள் என்ற எண்ணத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளார் கமல்ஜித் சிங். 

கடந்தாண்டு போலீஸ் வீடு ஒன்றில் இருந்து ஒரு பிஸ்டல், 30 துப்பாக்கிக் குண்டுகளையும் திருடியதற்காக கமல்ஜித் சிங்கை போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர், கடந்த ஜனவரி மாதம் அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். ஜாமீனில் வெளிவந்த பின்னும் தன்னுடைய கைவரிசையை போலீஸ் வீடுகளில் தொடர்ச்சியாக காட்டி வந்துள்ளார். 

இந்நிலையில், கடந்த புதன்கிழமை அடுத்தடுத்த இரண்டு போலீஸ் வீடுகளில் தன்னுடைய திருட்டை அவர் நிகழ்த்தியுள்ளார். விஜய் பானே என்பவரது வீட்டில் 60 கிராம் தங்கம் மற்றும் 2,800 ரூபாய் பணத்தை திருடிய கமல்ஜித், அதே குடியிருப்பில் கீழ் தளத்தில் உள்ள ரஹினி ஜக்தாலே என்ற போலீஸ் வீட்டிற்குள் புகுந்துள்ளார். ஆனால், அந்த வீட்டில் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. பின்னர் வெளியே வந்து சாலையில் சாதாரணமாக நடந்து சென்றுள்ளான். போலீசாரின் வீடுகளில் திருடிவிட்டு யாராவது சாதாரணமாக நடப்பார்களா?.

ஜக்தாலே வீட்டின் பூட்டை உடைக்கும் போது பக்கத்து வீட்டுக்காரர் அதனை பார்த்துள்ளார். உடனடியாக மூன்றாவது தளத்தில் உள்ள யஷ்வந்த் ராஸம் என்ற போலீஸுக்கு போன் செய்து தகவலை தெரிவித்துள்ளார். யஷ்வந்த் கீழே இறங்கி வரும் போதே இரண்டாவது தளத்தில் உள்ள அவரது சகோதரர் விஜய் ஏதோ நடக்கிறது என்று வெளியே வந்துள்ளார். இவர்களுடன் மற்றொரு கான்ஸ்டபிள் சந்தோஷ் ஆதிவரேகர் என்பவரும் சேர்ந்து கொண்டார். 

           

மூவரும் சேர்ந்து திருடனை தேடியுள்ளனர். தெருவில் நடந்து சென்ற கமல்ஜித்தை கண்ட உடன் மூன்று பேரும் துரத்தி பிடித்துள்ளனர். காட்டன் கிரீன் ரயில்வே நிலையம் அருகில் கமல்ஜித்தை பிடித்து அருகில் உள்ள கலசோவ்கி போலீஸ் நிலையத்தில் ஒப்படைந்துள்ளனர். பின்னர் ஜூன் 9ம் தேதி கமல்ஜித் வாடாலா போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டான். தொழிலதிபர் ஒருவர் வீட்டில் ரூ59,000 திருடிய வழக்கில் கமல்ஜித் தேடப்பட்டு வந்தார் என்பது பின்னர் தெரிய வந்தது. கமல்ஜித் இதுவரை 15க்கும் மேற்பட்ட போலீசாரின் வீடுகளில் தனது கைவரிசையை காட்டியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close