[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆதார் அடையாள அட்டை செல்லும் - உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் செப்டம்பர் 28 முதல் 30ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு

வாஜ்பாய் குறித்து அவரின் வளர்ப்பு மகளிடம் நலம் விசாரித்த வைகோ..!

vaiko-met-vajpayee-stepping-daughter

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் உடல்நலம் குறித்து அவரின் வளர்ப்பு மகளிடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் கேட்டறிந்தார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை திங்கள்கிழமை மோசமடைந்தது. இதனையடுத்து நேற்று அவர் டெல்லி எய்ம்ஸை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வாஜ்பாய்க்கு சிறுநீர் தொற்று ஏற்பட்டுள்ளதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து அவரை பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நேரில் நலம் விசாரித்தனர். இதனிடையே வாஜ்பாய் உடல்நலம் குறித்த அறிக்கையை எய்ம்ஸ் இன்று வெளியிட்டது. அதில் " வாஜ்பாய் உடல்நிலை சீராக இருக்கிறது. அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் மருந்துகள் செலுத்தப்படுகிறது. அவரின் உடல்நிலை முன்னேறும் வரை மருத்துவமனை கண்காணிப்பில் இருப்பார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் உடல்நலம் குறித்து அவரின் வளர்ப்பு மகளிடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உடல்‌நலக்குறைவுடன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாய் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்தவுடன் விமானம் மூலம் தான் டெல்லி சென்றதாக வைகோ கூறினார். எ‌ய்ம்ஸ் மருத்துவ‌னையில் அனுமதிக்கப்பட்டுள்ள வாஜ்பாய் நலமாக இருப்பதாகவும், அவருக்கு சிறுநீரகப் பாதையில் நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக அவர் கூறினார். வாஜ்பாயைதான் தான் பாக்கவில்லை என்றும் அவரின் வளர்ப்பு மகள் நமீதாவை பார்த்து அவரின் நலம் பற்றி விசாரித்ததாகவும் வைகோ தெரிவித்தார். மேலும், வாஜ்பாய் விரைவில் குணமடைந்துவிடுவார் என மருத்துவர்கள் தெரிவித்ததாக வைகோ கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close