[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா ஹிமாச்சல பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமனம் . ஹிமாச்சல் ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிடமாற்றம்
  • BREAKING-NEWS ‘பெருங்களத்தூர் டூ சிங்கப்பெருமாள் கோவில்- 8 வழிச்சாலை’ : முதல்வர் அறிவிப்பு
  • BREAKING-NEWS தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

“மன அழுத்தம் தாங்க முடியல” - துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த சாமியார் மகாராஜ்

controversial-godman-bhayyuji-maharaj-shoots-himself-dead-in-indore

சர்ச்சைக்குரிய சாமியார் மற்றும் ஆன்மீக தலைவர் பய்யூஜி மகாராஜ்(50) துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட அவரை உடனடியாக இந்தூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இந்தூர் நகரில் உள்ள சில்வர் ஸ்பிரிங் பகுதியில் உள்ள அவரது ஆசிரமத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தற்கொலைக்கு முன்பாக சாமியார் மாகாராஜ் எழுதிய கடிதத்தில், “என்னுடைய குடும்பத்தினை யாராது சிலர் கவனித்துக் கொள்ள வேண்டும். அதிகப்படியான மன அழுத்தத்தால் நான் உங்களை விட்டு போகிறேன். நான் விரக்தியடைந்து விட்டேன்” என்று குறிப்பிட்டு இருந்தார். சாமியார் மகாராஜின் இறப்பு செய்தியை கேட்டு அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர். 

                

சாமியார் மகாராஜ் மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் மிகவும் பிரபலமானவர். இந்தூர் நகரில் இவரது ஆசிரமம் உள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கு ஆன்மிக ஆலோசனை வழங்கி வந்துள்ளார். மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவீஸ், பிரபல பாடகர் லதா மங்கேஷ்கர் உள்ளிட்டோர் இவரது சீடர்கள். முன்னதாக அமைச்சர் பதவி தருவதாக மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கடந்த ஏப்ரல் மாதம் விடுத்த அழைப்பை சாமியார் மகாராஜ் ஏற்க மறுத்துவிட்டார்.

முதல் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் கடந்த ஆண்டு மீண்டும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பொது வாழ்வில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 2016ம் ஆண்டு மகாராஜ் அறிவித்தார். இது அவரது ஆதரவாளர் பலருக்கும் அதிர்ச்சி அளித்தது.

           

2011ம் ஆண்டு லோக்பால் சட்டத்தை இயற்ற வலியுறுத்தி டெல்லி ராம்லீலா மைதானத்தில் அன்னா ஹசாரே மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் அரசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே சாமியார் மகாராஜ் ஒரு மத்தியஸ்தரராக செயல்பட்டார். 

போட்டோ கேலரி

1 of 5

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close