[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்
  • BREAKING-NEWS வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
  • BREAKING-NEWS தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS பட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.

இந்தியாவில் கடந்தாண்டு வன்முறைகளால் ரூ.80 லட்சம் கோடி இழப்பு

violence-cost-india-s-gdp-over-1-trillion-last-year

இந்தியாவில் கடந்தாண்டில் பல்வேறு காரணங்களுக்காக நடைபெற்ற வன்முறைகளால் நாட்டின் பொருளாதாரத்திற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் 80 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Institute for Economics and Peace என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்தாண்டில் மட்டும் இந்தியாவில் பல காரணங்களுக்காக நடைபெற்ற வன்முறைகளால் நாட்டின் பொருளாதாரத்திற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் 80 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்முறைகளால் ஏற்பட்ட இழப்பின் மதிப்பு நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பில் 9% என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வன்முறைகளால் ஒவ்வொரு குடிமகனுக்கும் தலா 40 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வன்முறை மற்றும் கலவரங்களால் அதிகளவு பாதிக்கப்பட்ட நாடுகளாக சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் திகழ்வதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மிகக்குறைந்த அளவு வன்முறைகள் நிகழும் நாடுகளாக சுவிட்சர்லாந்து திகழ்வதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close