[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

கடவுளை மகிழ்விக்க குழந்தையை கொன்ற தந்தை !

rajasthan-man-arrested-for-sacrificing-daughter

ராஜஸ்தான் மாநிலத்தில் கடவுளை மகிழ்விப்பதற்காக எனக் கூறி தனது 4 வயது மகளை கொலை செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியை சேர்ந்தவர் நவாப் அலி. இவர் அப்பகுதியில் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு அலி தனது குடும்பத்தினருடன் வீட்டு மாடியில் உறங்கியுள்ளார். காலையில் பார்த்த போது அவர்களது 4 வயது மகள் ரிஷ்வானாவை காணவில்லை. குடும்பத்தினர் சிறுமியை அப்பகுதியில் தேடியுள்ளனர். வீட்டின் தரை தளத்தில் கழுத்தறுப்பட்ட நிலையில் சிறுமி கண்டெடுக்கப்பட்டார். இதனையடுத்து சிறுமியை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில் சிறுமியை பூனை கடித்து இருக்கலாம் என நவாப் அலி தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நவாப் அலி முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார்.இதனால் அவரிடம் மேற்கொண்டு விசாராணை நடத்த திட்டமிட்டனர்.ஆனால் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து வீட்டிற்குள் சென்று கதவுகளை தாழிட்டுக்கொண்டார். அதன்பின் காவல்துறையினரின் கிடுக்குப்பிடி விசாரணையில் தன் மகளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.கடவுளை மகிழ்ச்சிப்படுத்தவே தன் மகளை கொன்று பலியிட்டதாக அவர் அளித்த வாக்குமூலத்தை கேட்ட காவல்துறையினர் அதிர்ந்து போயினர். இதையடுத்து குரேஷியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், வியாழக்கிழமை நவாப் தனது மகளை அழைத்துக்கொண்டு கடைவீதிக்கு இனிப்புகள் எல்லாம் வாங்கிக்கொடுத்துள்ளார். நள்ளிரவில் சிறுமியை படிக்கெட்டுகளுக்கு கீழ் தூக்கி வந்து கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்ததாக தெரிவித்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close