[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு

8ம் வகுப்பு படித்தவர் உயர்கல்வி அமைச்சர் ஆக கூடாதா? - குமாரசாமி அளித்த நச் பதில்

higher-education-minister-in-karnataka-cabinet-is-a-class-8-pass-cm-kumaraswamy-sees-no-wrong

கர்நாடகாவில் 8 ஆம் வகுப்பு படித்த ஜிடி.தேவகௌடா உயர்கல்வித் துறை அமைச்சரானது குறித்த கேள்விக்கு முதலமைச்சர் குமாரசாமி பதிலளித்துள்ளார். 

காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி கடந்த 23ஆம் தேதி பதவியேற்றார். அன்றே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பரமேஷ்வர் துணை முதலமைச்சராக பதவியேற்றார். குமாரசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றாலும், அமைச்சரவை விவகாரத்தில் மீண்டும் சிக்கல் தொடங்கியது. இரு கட்சிகளிடையே அமைச்சரவை அமைப்பதில் பெரும் இழுபறி நடந்தது.

பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிந்த நிலையில், ஜூன் 6ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. பதவியேற்பு விழாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த 25 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார், குமாரசாமி அண்ணன் ரேவண்ணா ஆகியோர் அமைச்சர்களாகினர். சிவக்குமார் நீர்வளத்துறை அமைச்சராகி உள்ளார். ரேவண்ணாவிற்கு பொதுப்பணித்துறை வழங்கப்பட்டுள்ளது. சித்தராமைய்யாவை தோற்கடித்த ஜி.டி. தேவே கவுடாவும் அமைச்சராகி உள்ளார்.

இந்நிலையில், 8 ஆம் வகுப்பு மட்டுமே படித்த ஜி.டி.தேவ கௌடாவிற்கு உயர்கல்வி அமைச்சர் பதவி வழங்கியது குறித்து முதலமைச்சர் குமாரசாமியிடம் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினர். செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த குமாரசாமி, “நான் என்ன படித்திருக்கிறேன்? ஆனால், முதலமைச்சராக இருக்கிறேன். அவர் உயர்கல்வி அமைச்சர் ஆக இருப்பதனால் என்ன? அவருக்கு நிதித்துறை கொடுக்க வேண்டுமா? குறிப்பிட்ட சில துறைகளுக்கு போட்டி இருக்கிறது. எதுவாக இருந்தாலும் அது கட்சி எடுக்கும் முடிவு தான்” என்று கூறினார்.  

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close