[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்

“பிரசவகால உயிரிழப்பில் இருந்து ஒவ்வொரு நாளும் 30 பெண்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்”

every-day-30-more-pregnant-women-are-now-being-saved-in-india-when-compared-to-2013

இந்தியாவில் பிரசவகால பெண்களின் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக யுனிசெப் அமைப்புக்கான இந்திய பிரதிநிதி கூறியுள்ளார். இதுகுறித்து இந்திய பிரதிநிதி யாஸ்மின் அலி ஹேக் கூறுகையில், “பிரசவகால பெண்களின் இறப்பு விகிதத்தை குறைப்பதில் இந்தியா குறிப்பிடும்படியான முன்னேற்றம் அடைந்துள்ளது” என்றார். 

இந்தியாவில் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் நாடு முழுவதும் நிகழும் பிரசவ கால இறப்புகள், சிசு மரணங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும். இறப்பிற்கான காரணம், தடுப்பூசிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் போட்டுள்ளனரா, கிராம செவிலியர்கள் கண்காணிப்பு செய்துள்ளனரா என்பது போன்ற தகவல்கள் இந்தக் கணக்கெடுப்பின் போது சேகரிக்கப்படுகிறது. தற்போது, 2011 முதல் 2016ம் ஆண்டு வரையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதற்கான தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அந்தக் கணக்கெடுப்பின் படி இந்தியாவில் பிரசவகால பெண்களின் இறப்பு விகிதம் 2013ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 22 சதவீதம் குறைந்துள்ளது. இதில் அதிகபட்சமாக உத்திரப்பிரதேச மாநிலத்தில் 30 சதவீதம் குறைந்துள்ளது. இந்தியாவில் பிரசவகால பாதிப்புகளால் ஒவ்வொரு மாதமும் 1000 பெண்கள் சராசரியாக உயிரிழக்கின்றனர். 

மத்திய அரசின் புள்ளி விவரங்களின் படி, 2011-13 ஆம் ஆண்டி 167 ஆக இருந்த இறப்பு விகிதம், 2014-16 ஆம் ஆண்டுகளில் 130 ஆக குறைந்துள்ளது. தென் மாநிலங்களை பொறுத்தவரை பிரசவகால பெண்களின் இறப்பு விகிதம் 93 இல் இருந்து 77 ஆக குறைந்துள்ளது. மற்ற மாநிலங்களில் 115 இல் இருந்து 93 ஆக குறைந்துள்ளது.

           

2016 ஆம் ஆண்டில் 12 ஆயிரம் பெண்கள் பிரசவகால பாதிப்புகளில் இறந்துள்ளனர். அதாவது 2013ம் ஆண்டினை ஒப்பிடுகையில் ஒவ்வொரு நாளும் 30 பெண்கள் கர்ப்ப கால உயிரிழப்பில் இருந்து தடுத்து பாதுகாக்கப்படுகிறார்கள். இதில், கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. ஒரு லட்சம் பெண்களுக்கு 70 என்ற இலக்கை அவர்கள் எட்டியுள்ளார்கள். 

        

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close