[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்

35 மார்க்குக்கு எக்ஸாம் ! ஆனா வாங்கினது 38 மார்க் ! பீகார் குளறுபடிகள்

bihar-board-students-score-more-than-total

பீகார் மாநில தேர்வு கட்டுப்பாடு வாரியத்தின் குளறுபடியால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

பீகாரில் சமீபத்தில் நடைப்பெற்ற பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இந்த தேர்வு முடிவுகள் பலருக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக தேர்வு முடிவுகள் வெளியாகும் போது குறைவான மதிப்பெண்களே கிடைத்துள்ளது என தேர்வு கட்டுப்பாடு வாரியத்தையும், விடைத்தாளை திருத்தியவர்களை மாணவர்கள் வசைப்பாடுவார்கள். ஆனால் பீகாரில் வெளியான தேர்வு முடிவில் அனுமதிக்கப்பட்ட மதிப்பெண்களை விட கூடுதல் மதிப்பெண்கள் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

கணிதத்தேர்வில் பீம் குமார் என்ற மாணவனுக்கு 35 மதிப்பெண்களுக்கு 38 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது.ஆனால் அவர் இதுகுறித்து ஆச்சரியப்படவில்லை இது வழக்கமாக பீகாரில் நடப்பது தான் என கடந்துவிட்டார். சந்தீப் ராஜ் என்ற மாணவருக்கு இயற்பியல் பாடத்தில் 35மதிப்பெண்களுக்கு 38 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ராகுல் குமார் என்ற மாணவனுக்கு ஆங்கிலம் மற்றும் ராஷ்ட்ரா பாஷாவில் பூஜ்ஜியம் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. இது எப்படி நிகழும் என கேள்வியெழுப்பியுள்ளார்.

வைசாலியை சேர்ந்த ஜான்வி சிங் என்ற மாணவிக்கு தான் பங்கேற்காத உயிரியல் தேர்வில் 18 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது.மேலும் சிலருக்கு இது போன்று கூடுதல் மதிப்பெண்களும், பங்கேற்காத தேர்வுக்கு மதிப்பெண்களும் வழங்கப்பட்டுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close