[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மணிப்பூர் மாநிலத்தில் இந்தியா- மியான்மர் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்- ரிக்டா அளவில் 4 ஆக பதிவு
  • BREAKING-NEWS யோகா பயிற்சியால் மன அமைதியை பெற முடியும், எதிர்காலத்தை கட்டமைக்க முடியும்- பிரதமர் நரேந்திர மோடி
  • BREAKING-NEWS வேதாரண்யம் பகுதியில் கடல்சீற்றம் காரணமாக 2 ஆவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
  • BREAKING-NEWS யோகா அரசியலோ, மதம் சார்ந்த ஒன்றோ அல்ல; யோகா மக்கள் இயக்கமாக வேண்டும்- வெங்கையா நாயுடு
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS ஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்
  • BREAKING-NEWS போராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்

கைமீறிப் போன 1 மார்க்! கைப்பற்றிய மாணவன்

karnataka-class-10-topper-sends-papers-for-re-evaluation-and-scores-full-marks

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முகமது கைஃப் முல்லா அம்மாநிலத்தில் நடைப்பெற்ற 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 625 மதிப்பெண்களுக்கு 624 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றார். ஆனால் தான் எப்படி ஒரு மதிப்பெண்ணை தவறவிட்டேன் என்பதை அறிய மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தார்.அதில் அவருக்கு முழுமதிப்பெண்கள் கிடைத்தது. இதன்மூலம் அனைத்து பாடங்களிலும் 100 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
 
இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள கைஃப், “ நான் அனைத்து பாடங்களிலும் 100 சதவீத மதிப்பெண்கள் பெறுவேன் என நம்பிக்கையுடன் இருந்தேன். தேர்வுக்கும் பின்னர் நான் அளித்த விடைகள் சரியாக உள்ளதா என்பதை ஆசிரியர்களிடம் கேட்டும், பாடபுத்தகங்களை பார்த்து உறுதி செய்துக்கொண்டேன்.  நான் அளித்த விடைகள் அனைத்து சரியாகவே இருந்தது. ஆனால் தேர்வு முடிவு வெளியான போது நான் 624 மதிப்பெண்கள் மற்றுமே பெற்றிருந்தேன். ஆனால் மறுக் கூட்டலில் நான் எதிர்ப்பார்த்த மதிப்பெண்கள் கிடைத்து” என்றார்.

கைஃப்பின் தாய் தந்தை இருவருமே ஆசிரியர்கள். இவரது தந்தை ஹரூன் ரஷித் முல்லா அரசு தொடக்கப்பள்ளியில் உருது ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவரது தாய் அரசு பள்ளியில் கன்னட ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

கைஃப் தந்தை பேசுகையில், கைஃப் நன்றாக படிக்கக்கூடியவன். மற்றவர்களை போல் சமூகவலைதளங்களில் போன்ற தேவையில்லாத விஷயங்களில் நேரத்தை வீணாக்கமாட்டான். என்னுடைய ஆசை எல்லாம் அவன் கடுமையாக படித்து ஒரு சாதனையாளனாக வரவேண்டும் என்பது தான் என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close