[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு
  • BREAKING-NEWS மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு
  • BREAKING-NEWS நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி

‘மதத்தால் இந்தியாவை விலக்கினால் நாடே இருக்காது’ - பிரணாப் முகர்ஜி

pranab-mukherjee-addresses-rss-workers-top-quotes

மதம் மற்றும் சகிப்பின்மை மூலம் இந்தியாவை விலக்க முயற்சி நடந்தால், நாடே இல்லாத நிலை ஏற்படும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி எச்சரித்துள்ளார்.

பல்வேறு சர்ச்சைகள், விமர்சனங்களுக்கு இடையே, மகாராஷ்ட்ராவின் நாக்பூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, நமது நாட்டின் அடையாளமே வேற்றுமையில் ஒற்றுமையும், பன்முகத்தன்மையும்தான் என்று கூறினார். மாறாக, மதம் மற்றும் சகிப்பின்மை மூலம் இந்தியாவை வரையறுக்க முயன்றால், அதன் அடையாளமே இல்லாமல் போய்விடும் என்றும் எச்சரித்தார். சகிப்புத்தன்மை மூலமே நாம் வலிமையைப் பெற்றிருப்பதாக கூறிய பிரணாப் முகர்ஜி, பன்முகத்தன்மையை மதிப்பதும், வேற்றுமையில் ஒற்றுமையைக் கொண்டாடுவதும் நமது கவுரவம் என்றும் தெரிவித்தார். 

நமது பாரத நாடு, தேசியம் மற்றும் தேசபக்தி குறித்த தனது புரிதலை பகிர்ந்து கொள்ளவே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாகக் கூறிய அவர், எல்லா வகையான அச்சம் மற்றும் வன்முறையில் இருந்து மக்கள் காக்கப்பட்டு சுதந்திரமாக வாழ்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். முன்னதாக பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பிரணாப் முகர்ஜியை அழைத்ததை விமர்சிப்பது, அர்த்தமற்றது என்று தெரிவித்தார். தங்கள் அமைப்பைப் பொறுத்தவரை இந்தியர்கள் யாருமே வெளியாட்கள் அல்ல என்றும் மோகன் பகவத் கூறினார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close