[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்
  • BREAKING-NEWS கேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்
  • BREAKING-NEWS 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு

ப.சிதம்பரத்தை கைது செய்ய ஜூலை 10 வரை தடை

court-gives-p-chidambaram-protection-from-arrest-by-ed-till-10-july

 

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அமலாக்கத்துறையில் ஆஜராகியுள்ள நிலையில், ஜூலை 10ஆம் தேதி வரை அவரை கைது செய்ய, டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு ஏர்செல் செல்போன் நிறுவனத்தில் மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்தது. இதற்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சட்டவிரோதமாக ஒப்புதல் அளித்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இது தொடர்பாக ஏற்கனவே ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் ப.சிதம்பரத்தை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இந்த வழக்கில் ஜூன் 5-ம் தேதி (இன்று) வரை ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய பாட்டியாலா நீதிமன்றம் தடை விதித்தது.

ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் இன்றுடன் முடிவடையும் நிலையில், டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் விசாரணை நடைப்பெற்றது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனால், ப.சிதம்பரத்தின் முன் ஜாமீனை ஜூலை 10ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையே, ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் அமலாக்கத்துறை சம்மனை அடுத்து, டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ப.சிதம்பரம் ஆஜராகியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close