[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு
  • BREAKING-NEWS டெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...
  • BREAKING-NEWS வழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு
  • BREAKING-NEWS சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை
  • BREAKING-NEWS சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை
  • BREAKING-NEWS சபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்

நீட் தேர்வில் தோல்வி: டெல்லி மாணவர் 8-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

neet-aspirant-jumps-off-8th-floor-in-dwarka

நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியால் டெல்லி மாணவர் 8ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கு நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்நிலையில் நீட் தேர்வில் தோல்வியைடந்த விரக்தியால் டெல்லி மாணவர் ஒருவர் 8-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். டெல்லியின் துவாரகா செக்டார் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்த அவர், தரையில் ரத்த வெள்ளத்தில் விழுந்து உயிரிழந்து கிடந்தார்.

அவரது குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வை மாணவர் பர்ணவ் மெகந்திரதா எழுதியதாகவும், நேற்று வெளியான முடிவில் அவர் தோல்வி அடைந்தது தெரிய வந்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. மாணவர் எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதத்தில், நீட் தேர்வு முடிவு குறித்து பெற்றோரிடம் பொய் கூறி விட்டதாகவும் கூறியுள்ளார். மாணவர் பர்ணவின் அறையில் முடிச்சு போடப்பட்ட துப்பட்டா இருந்ததும் தெரிய வந்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close