[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்
  • BREAKING-NEWS 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு
  • BREAKING-NEWS கொச்சி விமான நிலையம் மூடல்

"நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகள்"-கருணாநிதிக்கு மோடி வாழ்த்து

modi-wishesed-karunanidhi

கருணாநிதியின் 95ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகள் என பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதிக்கு இன்று 95ஆவது பிறந்த நாள். இதனை முன்னிட்டு, சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லம் விழாக்கோலம் பூண்டுள்ளது. வீட்டின் வெளியே ஏராளமான வாழை மரங்கள், தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. வண்ண விளக்குகளால் வீடு அலங்கரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மூத்த அரசியல் தலைவரான கருணாநிதிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

                   

இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு, பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், கருணாநிதி சிறந்த எழுத்தாளர், கவிஞர், சிந்தனையாளர், பேச்சாளர் என புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியாவில் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். கருணாநிதி நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ வாழ்த்துவதாக பிரதமர் மோடி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். சென்னையில் கருணாநிதியை சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தையும் தனது டிவிட்டர் பக்கத்தில் மோடி பதிவிட்டுள்ளார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close