[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

கேரளாவில் நிஃபா வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழப்பு 13 ஆக உயர்வு

nipah-virus-attack-death-toll-increased-in-kerala

கேரளாவில் நிஃபா வைரஸ் காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலியாகியுள்ளளார். இதனையடுத்து இதுவரை நிஃபா வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் கடந்த சில நாட்களாக நிஃபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வந்தது. எனவே நிஃபா வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நிஃபா வைரஸ் அறிகுறியுடன் கோழிக்கோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கல்யாணி என்ற பெண் இன்று உயிரிழந்தார். இதனையடுத்து கேரளாவில் நிஃபா வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே மேலும் சிலர் நிஃபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close