[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை

ரஷ்யா செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

pm-modi-vladimir-putin-may-discuss-energy-nuclear-issues-at-no-agenda-summit

பிரதமர் நரேந்திர மோடி நாளை ரஷ்யா புறப்பட்டுச் செல்கிறார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்கவுள்ள பிரதமர், ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து பேசுவார் எனத் தெரிகிறது. ஈரானுடனான அமெரிக்காவின் மோதல் போக்கால் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது, மேலும் ஈரானில் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த சபார் துறைமுகம் அமைப்பதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் புடினும் மோடியும் நடத்தும் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறுகிறது. சோச்சி நகரத்தில் நடைபெறும் இச்சந்திப்பில் ஆஃப்கானிஸ்தான், சிரியா நிலவரங்கள் குறித்தும் எதிர்வரும் முக்கியமான சர்வதேச கூட்டங்கள் குறித்தும் இரு தலைவர்களும் பேச உள்ளனர். 4 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை தனிப்பட்ட சந்திப்பு நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close