[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

எடியூரப்பா சந்திக்கும் 5வது சவால்: வெல்வாரா? வீழ்வாரா?

floor-test-history-in-yeddyurappa-carrier

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வது இது முதல்முறையல்ல.இதற்கு முன் அவர் 4 முறை இந்த சவாலை சந்தித்துள்ளார். 

கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றுள்ள எடியூ‌ரப்பா தலைமையிலான அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் அளித்திருந்தார். இந்நிலையில், இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வது இது முதல்முறையல்ல. 2007ம் ஆண்டு எடியூரப்பா முதல்வராக இருந்த போது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் மதச்சார்பற்ற ஜனதா தள உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்ததால் ஏழே நாட்களில் ஆட்சியை பறிகொடுத்தார் எடியூரப்பா. 

2008ம் ஆண்டில் தேர்தலில் வென்று மீண்டும் அரியணை ஏறிய எடியூரப்பாவிற்கு இரண்டே ஆண்டுகளில் அடுத்த சோதனை ஏற்பட்டது. 11 பாஜக எம்எல்ஏக்களும் 5 சுயேச்சை எம்எல்ஏக்களும் தங்கள் ஆதரவை விலக்கிக்கொண்டனர். இதனால், 2010 அக்டோபர் 11ல் மீண்டும் பேரவையில் பலப்பரீட்சையை சந்தித்தார் எடியூரப்பா, அதில் அவர் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். ஆனால் வாக்கெடுப்பு முறையாக நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அடுத்த 3 நாட்களில் எடியூரப்பா தனது பலத்தை மீண்டும் நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டார். இதன்பின் நடந்த வாக்கெடுப்பின்போது சபாநாயகர் போபையா 11 பாஜக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், ஆதரவை வாபஸ் பெற்ற 5 சுயேச்சைகள் ஆகிய 16 பேரையும் தகுதி நீக்கம் செய்தார். இதனால் எடியூரப்பா அரசு தப்பிப்பிழைத்தாலும் இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் சென்றபோது சபாநாயகர் செய்தது தவறு என தீர்ப்பளிக்கப்பட்டது. 

2011 ஜூன் மாதம், ஊழல் குற்றம் சாட்டப்பட்டிருந்த எடியூரப்பாவுக்கு 4 ஆவது முறையாக தனது பலத்தை பேரவையில் நிரூபிக்கும் சூழல் ஏற்பட்டது. ஆனால் இப்போது காங்கிரஸ், மஜத மற்றும் சுயேட்சைகள் புறக்கணித்ததால் எதிர்ப்பு ஏதுமின்றி எடியூரப்பா அரசு வென்றது. இப்படியாக பேரவையில் தான் சந்தித்த 4 வாக்கெடுப்புகளில் 3 முறை அவர் வென்றார். ஒன்றில் மட்டும் தோல்வியுற்றார். இப்போது இன்று மாலை 4 மணிக்கு 5 ஆவது முறையாக பேரவையில் பலப்பரீட்சையை சந்திக்க உள்ளார் எடியூரப்பா.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close