[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லி- மீரட் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை திறப்பு
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை: அமைச்சர் கடம்பூர் ராஜு
  • BREAKING-NEWS இயல்பு நிலைக்கு திரும்புகிறது தூத்துக்குடி
  • BREAKING-NEWS நாட்டின் முதல் ஸ்மார்ட் நெடுஞ்சாலையை இன்று திறந்து வைக்கிறார் மோடி
  • BREAKING-NEWS வவ்வால்களால் நிஃபா வைரஸ் வரவில்லை- ஆய்வு முடிவில் விளக்கம்
  • BREAKING-NEWS முதலமைச்சர் உத்தரவின்படி ஆலைக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி
  • BREAKING-NEWS சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

கர்நாடகாவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

sc-orders-yeddyurappa-to-take-floor-test-on-saturday

கர்நாடகாவில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தவிரவிடுள்ளது. 

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக்கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இந் நிலையில், 104 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வந்த பாரதிய ஜனதா கட்சி தலைவர் எடியூரப்பாவை, ஆட்சி அமைக்குமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார். எடியூரப்பா பதவி ஏற்க எதிர்ப்புத் எதிர்த்து 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை கொண்டிருக்கும் மதசார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. விடிய விடிய 3 நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்து, எடியூரப்பா பதவி ஏற்க தடையில்லை என அறிவித்தது. மேலும் ஆட்சி அமைக்க உரிமை கோரி எடியூரப்பா ஆளுநரிடம் வழங்கிய கடிதத்தின் நகலை இன்று தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு இந்த வழக்கின் விசாரணை மீண்டும் நடைபெற்றது.

காங்கிரஸ் தரப்பில் ஆஜரான கபில் சிபில், எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தது தன்னிச்சையான முடிவு. யாரை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என முடிவு செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. ஆட்சியமைக்க அழைக்கும் விவகாரத்தில் மரபுகள் பின்பற்றப் படவில்லை’ என்று வாதிட்டார்.

 ’காங்கிரஸ், மஜத  பெரும்பான்மை இருக்கிறது என்று கூறிய நிலையில் பாரதிய ஜனதாவை மட்டும் ஆட்சி அமைக்க அழைத்தது ஏன் என்று கேள்வி கேட்ட உச்சநீதிமன்றம், நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. மூத்த உறுப்பினர் ஒருவரை தற்கா லிக சபாநாயகராக நியமித்து வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை 15 நாட்களுக்கு நிருபிக்க வேண்டும் என்றும் ஆளுநர் கூறியிருந்த நிலையில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close