[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு
  • BREAKING-NEWS கொச்சி விமான நிலையம் மூடல்
  • BREAKING-NEWS வரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்

கர்நாடக தேர்தல் முடிவை மாற்றிய நோட்டா

karnataka-election-poll-percentage

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில், நோட்டா ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. 

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் 38 சதவிகித வாக்குகள் பெற்று காங்கிரஸ் கட்சி முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் 36.2 சதவிகித வாக்குகளுடன் பாரதிய ஜனதா கட்சி உள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 18.3 சதவிகித வாக்குகளை பெற்று மூன்றாவது இடம் வகிக்கிறது. சுயேச்சைகள் 3.9 சதவிகித வாக்குகளுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக நோட்டா 3,22,841 வாக்குகள் பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. 0.9 சதவிகித வாக்குகளை பெற்றுள்ள நோட்டா சில தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பை தட்டி பறித்துள்ளது. நோட்டாவுக்கு கிடைத்த வாக்குகள் காங்கிரஸ், பாரதிய ஜனதா அல்லது மதச்சார்பற்ற ஜனதா தளம் போன்ற கட்சிகளுக்கு கிடைத்து இருந்தால் அவை கூடுதலாக சில இடங்களை பிடித்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close