[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS பணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ
  • BREAKING-NEWS பாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை
  • BREAKING-NEWS நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா!
  • BREAKING-NEWS பெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது! - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்

நவாஸ் ஷெரிப்பிற்கு ஏற்பட்ட நிலை காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படும்: நிர்மலா சீதாராமன்

nirmala-sitharaman-hits-out-at-p-chidambaram-over-foreign-assets

மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மீதான வருமானவரி ஏய்ப்பு புகார்கள் குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி விசாரணை நடத்துவாரா ? என  நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளார்களிடம் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன்,காங்கிரஸ் கட்சியின் தலைவரே சில சர்ச்சைக்குரிய நிதி பரிவர்த்தனைகளில் சிக்கி தற்போது பிணையில் வெளியில் உள்ளனர். ஆனால் காங்கிரஸ் கட்சியின் மூத்த முன்னாள் அமைச்சர் மீது முன்வைக்கப்படும் புகார்கள் குறித்து ராகுல் கருத்து சொல்லவேண்டும். இது தொடர்பாக விசாரணை நடத்துவாரா என்பதை நாட்டு மக்களுக்கு அவர் தெளிவுபடுத்த வேண்டும். அவரது கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர், தமக்கு வெளிநாட்டில் உள்ள சொத்துகள் குறித்து பகுதியாகவோ, முழுமையாகவோ தெரிவிக்காமல் இருக்கிறார். 

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கட்சி ரீதியாக விசாரணை நடத்துவாரா? என்றும் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார். பாகிஸ்தானில் நவாஸ் ஷெரிப் வெளிநாட்டு சொத்து விவரங்களை தெரிவிக்காததற்காக தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்பட்டதை குறிப்பிட்ட நிர்மலா, காங்கிரஸ் கட்சி அதே போன்றதொரு நிலையை எதிர்கொண்டிருப்பதாகக் கூறினார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close