[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு
  • BREAKING-NEWS இரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்
  • BREAKING-NEWS கேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்
  • BREAKING-NEWS 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது

கர்நாடகாவில் பிற்பகல் 3 மணி வரை 56% வாக்குப்பதிவு

56-voter-turnout-recorded-till-3-am-in-karnataka

கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா, தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய 3 முக்கிய கட்சிகள் போட்டியிடுவதால் மும்முனைப்போட்டி ஏற்பட்டு உள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில், 222 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணம் அடைந்ததால் அந்தத் தொகுதிக்கும், ஆயிரக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதால்‌ ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிக்கும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

222 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பிற்பகல் 3 மணி வரையில் 56 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இடையே போட்டி நிலவுகிறது. தேர்தல் முடிவுகள் வரும் 15ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close