[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS பணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ
  • BREAKING-NEWS பாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை
  • BREAKING-NEWS நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா!
  • BREAKING-NEWS பெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது! - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்

கர்நாடகாவில் 11 மணி நிலவரப்படி 24% வாக்குப்பதிவு

24-voter-turnout-recorded-till-11-am-in-karnataka

கர்நாடகாவில் 11 மணி நிலவரப்படி 24 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா, தேவேகவுடா வின் மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய 3 முக்கிய கட்சிகள் போட்டியிடுவதால் மும்முனைப்போட்டி ஏற்பட்டு உள்ளது. 224 தொகுதிகளை கொண்ட இங்கு வேட்பாளர் ஒருவர் இறந்தது, போலி வாக்காளர் அடையாள அட்டை கண்டுபிடிக்கப்பட்டது ஆகிய காரணங்களால் இரண்டு தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கவில்லை. 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. 

சுமார் 2,600 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். வாக்களிப்பதற்காக 56 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. காலை முதலே வாக்குகள் விறுவிறுப்பாக பதிவானது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். காலை 11 மணி நிலவரப்படி 24 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close