[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அறிவாலயத்தை தலைமை செயலகமாக நினைத்துக் கொண்டு ஸ்டாலின் கற்பனையில் இருக்கிறார் : அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS கர்நாடகாவில் அதிகாரப் பகிர்வு குறித்து காங்கிரஸ்- மஜத இடையே பேச்சுவார்த்தை தீவிரம்
  • BREAKING-NEWS சென்னைக்கு தினமும் போதிய அளவில் நீர் வழங்கப்பட்டு வருகிறது; குடிநீர்ப்பஞ்சம் வராது- எஸ்.பி.வேலுமணி
  • BREAKING-NEWS தெற்காசியாவிலேயே இந்தியா தான் அதிகளவு வரிகளை பெட்ரோல்,டீசல் மீது விதிப்பதாக நினைக்கிறேன்-டிடிவி
  • BREAKING-NEWS பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் கவனிக்க வேண்டும், அயல் நாடுகள் மீது பழி சுமத்தக்கூடாது- கமல்ஹாசன்

கோ பூஜை ஃபர்ஸ்ட் ! வாக்குப்பதிவு நெக்ஸ்ட்

bsriramulu-was-seen-performing-gau-puja

கர்நாடகாவில் பாஜக வேட்பாளர் தனது வீட்டில் கோ பூஜையை முடித்துவிட்டு  வாக்களிக்க சென்றுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றுவருகிறது. 2 தொகுதிகளுக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் 222 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 56 ஆயிரத்து 696 வாக்குச் சாவடிகளில் 4 கோடியே 97 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்கை செலுத்த உள்ளனர். ஆளும் கட்சியான காங்கிரஸ் 220 தொகுதிகளிலும் எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவும் தலா 222 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. ஐக்கிய ஜனதா தளம் 199 தொகுதிகளிலும் களம் காண்கின்றன. நேர்மையான முறையில் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி தேர்தல் நடத்த ஏதுவாக மாநிலமெங்கும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில், சிமோகா தொகுதிக்கு உட்பட்ட ஷிகர்பூர் வாக்குச்சாவடியில் எடியூரப்பா தனது வாக்கைப் பதிவு செய்தார். முன்னதாக சிகார்புரில் உள்ள கோவிலுக்குச் சென்று எடியூரப்பா வழிபாடு செய்தார். எடியூரப்பா ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

கர்நாடக சட்டசபைத் தேர்தலில், முதல்வர் சித்த ராமையாவை எதிர்த்து பாஜக வேட்பாளர் ஸ்ரீராமுலு களமிறக்கப்பட்டுள்ளார். இவர் இன்று தனது வீட்டில் கோ பூஜை முடித்துவிட்டு வாக்களிக்க சென்றார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close