[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்
  • BREAKING-NEWS கேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்
  • BREAKING-NEWS 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு

‘பயங்கரவாதிகளின் தந்தை திலகர்’: 8ம் வகுப்பு பாடப் புத்தகத்தால் சர்ச்சை

bal-gangadhar-thilagar-is-a-father-of-terrorism-textbook-controversy

ராஜஸ்தான் மாநிலத்தில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான குறிப்புப் புத்தகத்தில் சுதந்திர போராட்ட வீரர் பாலகங்காதர திலகரை ‘தீவிரவாதத்தின் தந்தை’என குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் மாநில பாடநூல் வாரியம் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கி வருகிறது. ஆனால் அப்படி வழங்கப்படும் புத்தகங்கள் ஹிந்தி மொழியில் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளன. ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஹிந்தி புரியாது என்பதால் அவர்கள் குறிப்புப் புத்தகத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு நிர்பந்திக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்களும் தனியார் வெளியீடு சார்பில் வழங்கப்படும் குறிப்பு புத்தகங்களையே பயன்படுத்தி வருகின்றனர். அதில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான சமூக அறிவியில் குறிப்பு புத்தகத்தில் சுதந்திர போராட்ட வீரர் பாலகங்காதிர திலகர் ‘ தீவிரவாதத்தின் தந்தை’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பகுதி 22-ல் 267-ம் ஆம் பக்கத்தில் இந்தச் சர்ச்சை கருத்து வெளியாகி உள்ளது. 19ம் நூற்றாண்டின் தேசிய இயக்கத்தின் போது நடைபெற்ற சம்பவங்கள் என்ற தலைப்பில் பாலகங்காதர திலகரை ‘தீவிரவாதத்தின் தந்தை’ என விமர்சிக்கப்பட்டுள்ளது.

“ பால கங்காதர திலகர் தேசிய இயக்கத்தின் பாதையை எடுத்துக் காட்டினார். அதனால் அவர் பயங்கரவாதத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். அவர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் கெஞ்சுவது மூலம் எதையும் சாதித்துவிட முடியாது என நம்பினார். அதனால் அவர் நாட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை தூண்டினார். சுதந்திரத்திற்கான மந்திரத்தை அவர் மக்கள் மத்தியில் ஏற்படுத்தினார். அதன் காரணமாக பிரிட்டிஷ் ஆட்சியார்களின் கண்களுக்கு அவர் ஒரு முள்செடி போன்றே தெரிந்தார்” என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பு புத்தகத்தின் ஆசிரியர், திலகர் மக்கள் மத்தியில் ஏற்படுத்திய விழிப்புணர்பு குறித்து சரியான சொற்களை பயன்படுத்தாமல் மோசமான வார்த்தைகளால் ‘தீவிரவாதத்தின் தந்தை’ என குறிப்பிட்டுள்ளது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close