[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்
  • BREAKING-NEWS நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு
  • BREAKING-NEWS குண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு
  • BREAKING-NEWS டெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...

பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அரசியல் காரணங்கள்: ஒரு அசல் ரிப்போர்ட்

why-are-petrol-diesel-prices-not-costing-you-more-here-is-truth

இந்தியாவில் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல் விலை மாற்றம் என்ற முறை மாற்றப்பட்டு, கடந்த ஆண்டு ஜூன் 16ஆம் தேதி முதல் தினந்தோறும் பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்த முறை அமலுக்கு வந்த பிறகு நாள்தோறும் 10 காசுகள், 12 காசுகள் என பெட்ரோல் விலை உயர்ந்துகொண்டே வந்து வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து நிற்கிறது. இன்றைய நிலவரப்படி லிட்டர் பெட்ரோல் ரூ.77.43 மற்றும் லிட்டர் டீசல் ரூ.69.56 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கடந்து ஆண்டு முதல் தொடர்ச்சி ஆக உயர்ந்துகொண்டே வந்த பெட்ரோல் விலை கடந்த 17 நாட்களாக மட்டும் உயர்த்தப்படமால் உள்ளது. அதாவது கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி முதல் பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

இது ஏன்? என்ற கேள்வி சாமானிய மக்கள் முதல் பொருளாதார நிபுணர்கள் வரை கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏனெனில் கச்சா எண்ணெயின் சர்வதேச சந்தை மதிப்பை பொறுத்தே இந்தியாவில் பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே தான் வருகிறது. இருப்பினும் ஏன்? இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்த்தப்படாமல் இருக்கிறது. இதற்கு காரணம் கர்நாடக மாநிலத் தேர்தல்தான்? என்று கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

ஏனெனில் கடந்த ஏப்ரல் மாதத்தில் பெட்ரோல் விலை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்தது. இதனை கர்நாடக பிரச்சார மேடைகளில் குறிப்பிட்டு பேசிய காங்கிரஸ் கட்சியினர், மோடி அரசு பெட்ரோல் விலையை தொடர்ந்து உயர்த்தி மக்களிடம் கொள்ளை அடிப்பதாக குற்றம்சாட்டினர். இது தேர்தலில் எதிரொலிக்கும் என்ற அச்சத்தினால்தான் பெட்ரோல் விலை கடந்த 17 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால் தேர்தல் முடிந்த பிறகு கடந்த 17 நாட்களாக ஏற்றாமல் இருக்கும் விலையையும் சேர்த்து எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்தும் என்றும் கூறப்படுகிறது.

பெட்ரோலுக்கு செலுத்தும் வரி :

நாம் நாள்தோறும் வாங்கும் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 50% பணத்தை வரிக்காக மட்டும் செலுத்துகிறோம்; அந்த வரிகள் நீக்கப்பட்டால் விலையானது பாதியாகக் குறைய வாய்ப்புள்ளது. அதாவது, 1 லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் என்று வைத்து கொண்டால், முகவர்கள் 47 ரூபாய்க்கு வாங்குகின்றனர். அதில் கமிஷன் 5 ரூபாய் – மொத்தம் ரூ.52; பின்னர் மத்திய அரசு ரூ.27 வரியாக விதிக்கிறது; மாநில அரசு ரூ.21 வரியாக விதிக்கிறது. அதாவது வரியாக மட்டும் ரூ.48 விதிக்கப்படுகிறது. இதனை நுகர்வோரே அதாவது மக்களே செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. 

இதில் கலால் வரி மட்டும் ஏறக்குறைய ரூ.20 வரை வசூலிக்கப்படுகிறது. கடந்த 2014க்கு பிறகு 9 முறை கலால் வரி உயர்த்தப்பட்டும், 1 முறை மட்டும் குறைக்கப்பட்டும் உள்ளது. பலமுறை கலால் வரி உயர்த்தப்பட்ட போது , சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தே காணப்பட்டது. ஆனால் அப்போது கூட பெட்ரோலியம் மீதான வரியோ, ஒட்டுமொத்த விலையோ குறைக்கப்படவில்லை.  

பெட்ரோல், டீசல் விலைக் குறைய வாய்ப்பே இல்லையா என வினவினால், வாய்ப்பிருக்கிறது ஆனால் அது அரசியல்வாதிகள் கையில் இருக்கிறது என்கின்றனர் பொருளாதார ஆய்வாளர்கள். அதாவது இந்தியா மற்ற நாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.29, சுத்திகரிப்பு, போக்குவரத்து செலவு என அது 7-9 ரூபாய் சேர்க்கப்படும். இவற்றை சேர்த்து முகவருக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.35 அல்லது ரூ.37க்கு விற்கப்படும். ஆனால் நுகர்வோரின் கைக்கு கிடைக்கும் போது அதன் தற்போதைய விலை குறைந்தபட்சம் ரூ.70-ல் இருந்து ரூ.80 ஆக மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டு கிடைக்கிறது.

அதாவது ஏறக்குறைய ரூ.35-ரூ40 வரை வரியாக மட்டும் செலுத்தும் நிலை இருக்கிறது. இதனை குறைத்தால் பெட்ரோல், டீசலை இந்திய நுகர்வோரும் குறைந்த விலைக்கு வாங்க முடியும். அதற்கு பெட்ரோலிய பொருட்களுக்கு ஒரே மாதிரியான வரி விதிக்கப்பட வேண்டும் அல்லது வரி குறைக்கப்பட வேண்டும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close