[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு
  • BREAKING-NEWS கொச்சி விமான நிலையம் மூடல்
  • BREAKING-NEWS வரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்
  • BREAKING-NEWS இந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்

‘உள்ளாடையை கழற்றுமாறு வற்புறுத்தினார்கள்’ - நீட் தேர்வு எழுதிய மாணவி போலீசில் புகார்

kerala-student-forced-to-remove-bra-for-neet-files-case-on-invigilator-for-staring

கேரளாவில் நீட் தேர்வு எழுதிய மாணவியின் உள்ளாடையை அகற்ற கட்டாயப்படுத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து அந்த மாணவி சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பாலக்காடு கொப்பம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் தேர்வு எழுத சென்றுள்ளார். தேர்வு அறைக்குள் நுழையும் முன்பு அனைத்து சோதனைகளும் அவருக்கு நடத்தப்பட்டது. சோதனை முடிந்ததால் உள்ளே செல்லலாம் என்று நினைத்தவருக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சிகரமான சோதனை. மாணவியின் மேல் உள்ளாடையை சோதனையாளர்கள் கழற்றுமாறு கூறியுள்ளனர். அதாவது சிபிஎஸ்இ விதிமுறைகளின் படி ஆடைகளில் மெட்டல் இருக்கக் கூடாது. அந்த மாணவியின் உள்ளாடையில் மெட்டல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. சோதனையாளர்கள் சொன்னதை கேட்டதும் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சில நொடிகள் செய்வது அறியாது திகைத்து நின்றுள்ளார். 

கலவரமடைந்த முகத்துடன் காணப்பட்ட அந்த மாணவி வேறு வழியில்லாமல் சோதனையாளர்களின் வலியுறுத்தலுக்கு இசைந்தார். ஏற்கனவே தன்னுடைய ஷாலை கூட பெற்றோரிடம் கொடுத்துவிட்டு தான் அவர் தேர்வு அறைக்குள் வந்திருந்தார். இந்த சோதனைக்கு பிறகு அந்த மாணவி தேர்வு அறைக்குள் எந்த மனநிலையில் இருந்திருப்பார் என்ற கேள்வியும் இயல்பாக எழுகிறது. தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து அந்த மாணவி பாலக்காடின் வடக்கு நகர காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், உள்ளாடையை கழட்ட நேர்ந்த போது மிகவும் அவமானமாக உணர்ந்ததாக அவர் கூறியுள்ளார். 

          

இதுகுறித்து மாணவியின் உறவினர் கூறுகையில், “மாணவி எல்லாவிதமாக ஆடைக் கட்டுப்பாடு விதிகளை பின்பற்றிதான் இருந்தார். அவர் ஷால் கூட அணியவில்லை. அப்போது, தனது மேல் உள்ளாடையை கழட்ட சொன்னது அதிர்ச்சியூட்டக்கூடிய அனுபவமாக அவருக்கு இருந்தது. அதற்கும் மேலாக, தேர்வு எழுதும் போது ஆண் கண்காணிப்பாளர் தன்னுடைய உடலை மரியாதை குறைவாக பார்த்துள்ளார் என்றும் கூறினார். இதனால் அவர் மிகவும் பயந்துள்ளார்” என்றார். 

பாதிக்கப்பட்ட மாணவி கூறுகையில், “தன்னுடன் சேர்த்து மேலும் 25 மாணவிகளின் மேல் உள்ளாடைகளை சோதனையின் போது கழற்ற வைத்தார்கள். அதுதான் விதிமுறை என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், அதனை சரியாக நடைமுறைப்படுத்தி இருக்க வேண்டும். ஆடை மாற்றும் அறைகள் சரியான பாதுகாப்பு உடன் இல்லை” என்றார். மேலும், “இதுதான் விதிமுறை என்று நினைத்து, அந்த இடத்தில் நான் எதிர்ப்பு எதனையும் தெரிவிக்கவில்லை. தேர்வு முடிந்து நண்பர்களிடம் பேசிய பிறகு தான், தன்னுடைய தேர்வு மையத்தில் மட்டும் இதுபோன்று நடந்துள்ளது தெரிந்தது” என்றார். மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். 

           

தேர்வு நடந்த பள்ளி சார்பில், “எங்கள் பள்ளியில் நடந்த தேர்வில் பணியில் இருந்தவர்கள் அனைவரும் பெண் கண்காணிப்பாளர்கள் தான். சிபிஎஸ்இ சார்பில் ஒரு ஆண் கண்காணிப்பாளர் மட்டும் பார்வையாளராக வந்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Courtesy - Newminite)

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close