[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்
  • BREAKING-NEWS நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு
  • BREAKING-NEWS குண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு
  • BREAKING-NEWS டெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...

காங்கிரஸ் அகற்றப்படும் மோடி பேச்சு: வாக்குறுதிகள் என்னவானது சோனியா கேள்வி 

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியை அடியோடு அகற்றப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி பரப்புரையின்போது தெரிவித்தார். 

கர்நாடகாவில் வரும் 12 ஆம் தேதி சட்டப்பேரவைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து கர்நாடகாவில் பிரதமர் மோடி தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். விஜயபுராவில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர்‌ சட்டப்பேரவைத் தேர்தலில் அடையப்போகும் தோல்விக்கான காரணங்களை காங்கிரஸ் கட்சி இப்போதே தேடி வருவதாகவும் கூறின‌ார். தொங்கு சட்டமன்றம் அமையும் என்று கூறும் கருத்துக் கணிப்புகள் ஏசி அறைகளில் அமர்ந்து தயாரிக்கப்படுபவை என்றார். பிரித்தாளும் சூழ்ச்சியை காங்கிரஸ் கையாண்டுள்ளதாகவும், இதனை கர்நாடக மக்கள் அனுமதிக்கமாட்டார்கள் என்றும் தெரிவித்தார். 

இந்நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக பிரசார களம் கண்டுள்ள சோனியா காந்தி, கர்நாடகத்தில் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசி வாக்கு சேகரித்தார். நரேந்திரமோடி சிறந்த பேச்சாளர் என்றும் ஆனால் அது மக்களுக்கு உணவளிக்காது என்றும் சோனியா பேசினார். அனைவருக்கும் வளர்ச்சி என்ற முழக்கத்தை முன்வைத்த பிரதமர் மோடி கர்நாடகத்தை புறக்கணித்தது ஏன் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close