[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி தீ வைத்து எரிப்பு!

16-yr-old-girl-raped-set-ablze-in-jharkhand

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தீ வைத்துக்கொளுத்திய கொடுமை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

வடமாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தினமும் அரங்கேறுகின்றன. டெல்லியில் இந்த வருடத்தின் மூன்றரை மாதங்களில் மட்டும் தினமும் ஐந்துக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளக்கப்பட்டுள்ளனர். டெல்லியில், ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் கடந்த மாதம் 15ம் தேதி வரை, 578 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 

இந்நிலையில் ஜார்க்கண்டில் நேற்றிரவு 16 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தீ வைக்கப்பட்டார்.  ஜார்க்கண்ட் மாநிலம் பகுர் மாவட்டத்தில் உள்ள கன்கர்போனா பகுதியில் உள்ள தனது வீட்டில் 16 வயது சிறுமி நேற்று தனியாக இருந்தார். இதைக் கண்ட உள்ளூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அவர் வீட்டுக்குள் நுழைந்தார். சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பிறகு அவரை கொல்ல நினைத்து அவர் மீது தீ வைத்துவிட்டு தப்பியோடினார். அந்தச் சிறுமி, உயிர் பயத்தில் அலறி கதறினார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர்.

பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை மேற்கு வங்கத்தில் உள்ள மால்ட் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ நிவாரணமாக ரூ.20 ஆயிரத்தை பகுர் மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது. தப்பியோடிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close