[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

கை, கால்களை கட்டி வந்து பா.ஜ.க வேட்பாளருக்கு ஓட்டு: எடியூரப்பா பேச்சால் சர்ச்சை

tie-up-peoples-hands-and-legs-bring-them-to-vote-for-bjp-yeddyurappa

ஓட்டுப் போட வாக்காளர்கள் வரவில்லை என தெரியவந்தால், அவர்களது கை, கால்களை கட்டி வந்து பாரதிய ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டுப் போட வையுங்கள் என எடியூரப்பா தொண்டர்களுக்கு உத்தரவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. கிட்டூர் சட்டப்பேரவைத் தொகுதியில் நடந்த தேர்தல் பரப்புரையின்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய எடியூரப்பா, தொகுதி வேட்பாளர் மஹந்தேஷ் வெற்றி பெற வாக்காளர்களின் கால்களில் விழுந்து கட்சித் தொண்டர்கள் வாக்கு சேகரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

தேவைப்பட்டால் வாக்காளர்களின் கை, கால்களை கட்டி வந்து பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக வாக்களிக்க வைக்க வேண்டும் என்றும் பேசினார். அவரது இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வன்முறையை தூண்டும் வகையில் பேசிய எடியூரப்பா மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close