[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

10ஆம் வகுப்பு தேர்வில் 517 கேரளா அரசு பள்ளிகளில் 100% தேர்ச்சி!

kerala-10th-results-announced

கேரளாவில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், 517 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.

கேரளாவில் கடந்த மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் நடந்தன. மாநிலம் முழுக்க 4,41,403 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இன்று தேர்வு முடிவுகளை கேரள கல்வி அமைச்சர் ரவீந்திரநாத் வெளியிட்டார். தேர்வு எழுதியோரில் 4,31,162 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 97.84 ஆக உள்ளது. கடந்த ஆண்டு 95.98 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு முடிவுகளின்படி 34,313 பேர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில தேர்ச்சி சதவீதத்தில் முதல் மூன்று இடங்களை முறையே எர்ணாகுளம், மலப்புரம், வயநாடு மாவட்டங்கள் பிடித்துள்ளன.

517 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன. கடந்த ஆண்டு 405 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றிருந்தன. அதோடு 629 அரசு உதவிப் பெறும் பள்ளிகளும், 389 சுயநிதி பள்ளிகளும் என இந்த ஆண்டு மொத்தம் 1,565 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளன. கடந்த ஆண்டு 1,174 பள்ளிகளே 100 சதவீத தேர்ச்சியை பெற்றிருந்தன. தேர்வில் தோல்வியடைந்தவர்கள், மறுதேர்வுக்கு விண்ணப்பிக்க மே 9ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ப்ளஸ் 1 வகுப்பிற்கான மாணவ சேர்க்கையும் அதே தேதியில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close