[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது; வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி
  • BREAKING-NEWS 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன?; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி
  • BREAKING-NEWS சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலுடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், அதிமுக எம்.பி.க்கள் ஜெயவர்தன், வைத்திலிங்கம் சந்திப்பு
  • BREAKING-NEWS கர்நாடக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் அறிவிப்பு

காவிரியில் தொடரும் துரோகம்

cauvery-river-dispute-case

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், நடுவர் மன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த 6 வாரங்களுக்குள் புதிய திட்டத்தை வகுக்கும்படி கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி உத்தரவிட்டது. அதற்கான கெடு முடிந்தும் மத்திய அரசு வாரியத்தை அமைக்கவில்லை. இந்த வழக்கில் இதற்கு முன் நடந்த விசாரணையின்போது, 2 வார‌ங்களுக்கு நதிநீர் பங்கீடு குறித்த வரைவு திட்டத்தை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. காவிரி பிரச்னையில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட காலஅவகாசம் முடிவடையும் நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு  வந்தது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் நீர்ப் பங்கீட்டுக்கான வரைவு திட்டத்தை மத்திய அரசு தாக்கல் இன்றைய விசாரணையின் போது தாக்கல் செய்யவில்லை.

நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் , காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு திட்டம் தயாராகி விட்டது. பிரதமர் மற்றும் அமைச்சர்கள் கர்நாடக தேர்தல் பரப்புரையில் இருப்பதால் ஒப்புதல் பெற இயலவில்லை எனத் தெரிவித்தது. ஆகவே இந்த விவகாரத்தில் கால அவகாசம் வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதற்கு தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. காவிரி வாரியம் அமைக்க வேண்டுமென தீர்ப்பளித்து 2மாதமாகியும் எந்த நடவடிக்கையும் இல்லையென்றால் எங்கள் மக்களிடம் என்ன சொல்ல முடியும்?. இத்தனை நாட்களாக எந்த திட்டத்தையும்  இறுதி செய்யாத மத்திய அரசு, 10 நாட்களில் செயல்திட்டத்தை தாக்கல் செய்வோம் என்பதை எப்படி நம்ப முடியும் என தெரிவிக்கப்பட்டது.

காவிரி பிரச்சினையில் அரசியல் காரணங்களை ஏற்க முடியாது எனக் கூறிய நீதிமன்றம்.தமிழகத்துக்கு இந்த மாதம் 4 டிஎம்சி நீர் திறந்து விட நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது 4டிஎம்சி தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசு மறுத்ததால் நீர் தர முடியுமா? முடியாதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.  நீதிமன்ற உத்தரவை மீறினால் கர்நாடக அரசு கடும் விளைவை சந்திக்க நேரிடும் என எச்சரித்து வழக்கை வரும் 8ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


காவிரி - சி.வி.சண்முகம் கருத்து

காவிரி வழக்கு விசாரணையை தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் நேரில் பார்த்தார். வழக்கு விசாரணைக்கு பின்னர் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், மத்திய அரசு கூறிய காரணத்தை ஏற்க கூடாது என தமிழக அரசின் வழக்கறிஞர் வாதிட்டார். தமிழகத்திற்கு மத்திய அரசு ஓரவஞ்சனை செய்வதாக நமது வழக்கறிஞர் குற்றஞ்சாட்டினார். தமிழக வழக்கறிஞரின் வலுவான வாதம் காரணமாகவே 4 டிஎம்சி திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

சீமான் கருத்து

பிரதமர், அமைச்சர்கள் கர்நாடக தேர்தல் பரப்புரையில் இருப்பதாக மத்திய அரசு கூறுவதை ஏற்க முடியாது.கர்நாடக தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதே பாஜகவின் நோக்கம்; அதுவே தாமதத்திற்கான காரணம் என சீமான் தெரிவித்துள்ளார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close