[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்
  • BREAKING-NEWS வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
  • BREAKING-NEWS தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS பட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

திருமண விழாவில் நண்பரால் மணமகன் சுட்டுக்கொலை

celebratory-firing-turns-fatal-in-up

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள ராம்பூர் கிராமத்தில் திருமணவிழாவின் போது மணமகன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

வடமாநிலங்களில் திருமண விழாக்களின் போது மகிழ்ச்சிக்காக வானை நோக்கி துப்பாக்கியால் சுடுவது வழக்கம். அவ்வாறு சுடுவதற்காக வைக்கப்பட்டு இருந்த துப்பாக்கியால் மணமகனின் நண்பர், அவரை நோக்கி சுட்டதில் நெஞ்சில் குண்டுபாய்ந்து மணமேடையிலேயே மணமகன் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் பதிவாகியுள்ளன. இரண்டு முறை அந்த நபர் சுட்ட நிலையில் இரண்டாவது குண்டு சரியாக மணமகனின் நெஞ்சில் பாய்ந்ததால் அவர் அந்த இடத்திலேயே சரிந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனிடையே மணமகனின் நண்பரை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். வேண்டுமென்ற அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டாரா..? அல்லது தெரியாமல் நடந்ததா..? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close