[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்
  • BREAKING-NEWS மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா
  • BREAKING-NEWS என் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்
  • BREAKING-NEWS தென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்

வாய்க்காலில் கண்டெடுக்கப்பட்ட 9வயது சிறுமியின் உடல்

body-of-a-9year-old-girl-found-inside-a-bag

ஹரியானாவில் 9வயது மதிக்கத்தக்க சிறுமியின் உடல் வாய்க்காலுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கத்துவா மற்றும் உன்னோவ் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாட்டை உலுக்கி வரும் நிலையில் ஹரியானாவில் ஒரு சிறுமியின் உடல் வாய்க்காலின் அருகில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலம் திடௌலி என்ற கிராமத்தில் உள்ள ஒரு வாய்க்காலுக்கு அருகில் பை கிடந்துள்ளது.இதனை அப்பகுதியில் உள்ள நாய்கள் குதறிக்கொண்டிருந்தது.இதனைக்கண்ட கிராம மக்கள் நாய்களை விரட்டி விட்டு பையில் என்ன இருக்கிறது என அருகில் சென்று பார்த்துள்ளனர். குழந்தையின் உடல் அழுகிய நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக காவல்துறை தரப்பில், 9வயது மதிக்கத்தக்க சிறுமி போல் தெரிகிறது. உடல் அழுகிய நிலையில் இருப்பதால் ஒரு வாரத்திற்கு மேலாக இருக்கலாம் எனத் தெரிகிறது.பிரேத பரிசோதனைக்கு அறிக்கைக்கு வந்த பிறகு மேற்கொண்டு விவரங்கள் தெரியவரும் என கூறினர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close