[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

கூலிப்படையை ஏவி பெற்ற மகனை கொன்றார் அம்மா 

mom-paid-rs-1-lakh-to-contract-killer-to-murder-son-in-rajasthan

 

ராஜஸ்தானில் நிலத்தகராறில் பெற்ற மகனையே கூலிப்படையை ஏவி கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்தவர் பிரேமலதா. கணவரை இழந்த இவர் தனது மகள் மற்றும் மருமகனுடன் வசித்து வருகிறார். பிரேமலதாவுக்கு 21வயதில் மொஹித் என்ற மகன் உள்ளார். மகனின் நடவடிக்கைகள் சரியில்லாததால் அவரிடம் இருந்து விலகி தனது மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி ராஜஸ்தானின் ரதி தலை பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள பாலைவனத்தில் மோதி சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் தடயங்கள் கிடைக்காததால் காவல்துறையினர் மிகவும் சிரமப்பட்டனர். சம்பவம் நடைப்பெற்ற பகுதியில் உள்ள சுங்கச்சாவடி கேமராவை ஆய்வு செய்ததில் காவல்துறைக்கு துப்பு கிடைத்தது. இதனையடுத்து தீவிர விசாரணையில் களமிறங்கிய காவல்துறையினர். மொஹித்தை கொலை செய்தவர்களை கைது செய்தது. இந்தச் சம்பவத்தை ஒரு லட்சம் பெற்றுக்கொண்டு செய்ததாக கூலிப்படையினர் தெரிவித்தனர்.

கூலிப்படையினரை விசாரித்தில் அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்தது. பிரேம் லதாவே கூலிப்படைக்கு ஒரு லட்சம் கொடுத்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து தாய் பிரேமலதா கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரித்ததில், கணவன் இறந்த பிறகு மொஹித்துடன் வசிந்து வந்தேன். என்னிடம் தவறாக நடக்க முயன்றதையடுத்து எனது மகளுடன் வசித்து வருகிறேன். எங்களுக்கு சொந்தமாக உள்ள நிலத்தை விற்க மொஹித் எதிர்ப்பு தெரிவித்து இடைஞ்சல் கொடுத்து வந்தான் அதனால் அவனை கொலை செய்ய முடிவு செய்தேன் என தெரிவித்துள்ளார்.


இந்தசம்பவத்திற்காக கூலிப் படையினருக்கு முன்பணமாக ரூ.50,000 ஆயிரம் முன்கூட்டியே கொடுக்கப்பட்டடுள்ளது.சம்பவத்திற்கு பிறகு மொத்த தொகையும் அளிக்கப்பட்டது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றவாளிகள் அளித்த வாக்குமூலத்தில், கடந்த ஏப்.6ஆம் தேதி திட்டமிட்டபடி மொஹித்தை கொலை செய்த திட்டமிட்டோம். குடிபோதையில் இருந்த மொஹித் உணவகத்தில் சாப்பிட சென்றார்.அங்கு அவருக்கு தெரியாமல் உணவின் மயக்க மாத்திரையை கலக்கி கொடுத்தோம் மேலும் அவருக்கு பீர் வாங்கி கொடுத்தோம்.இதனையடுத்து அங்கிருந்து கிளம்பிய மொஹித்தை பின் தொடர்ந்து சென்றோம். அவருக்கு மேலும் ஒரு பீரை கொடுத்து மதுபோதையில் இருந்தவரை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டோம் என தெரிவித்துள்ளனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close