[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விருதுநகர்: அருப்புக்கோட்டையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை
  • BREAKING-NEWS வன்கொடுமை சட்டத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சென்னையில் 200 க்கும் மேற்பட்டோர் பேரணி
  • BREAKING-NEWS தமிழத்தில் எல்லாவித தூசிகளும் தட்டப்பட்டு காணாமல்போன குப்பை விஜயகாந்த்- அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS செம்பரபாக்கம் ஏரிக்கு திறக்கப்படும் நீரின் அளவு 443 கன அடியில் இருந்து 593 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS காங்கிரசுடன் பலஆண்டுகள் கூட்டணியில் இருந்தபோது காவிரி பிரச்னையை திமுக ஏன் தீர்க்கவில்லை?- தமிழிசை
  • BREAKING-NEWS மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்தால் சேதமடைந்த ஆயிரங்கால் மண்டபம் மீண்டும் திறப்பு
  • BREAKING-NEWS அணு ஆயுத சோதனை நிறுத்திவைக்கப்படும் என்ற வடகொரிய அதிபரின் அறிவிப்புக்கு ட்ரம்ப் வரவேற்பு

கர்நாடக தேர்தல் தேதி முன் கூட்டியே கசியவில்லை: கமிட்டி அறிக்கை

karnataka-election-date-did-not-leaked-committee-report

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் தேதி முன் கூட்டியே கசிந்ததாக கூற முடியாது என அது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட கமிட்டி அறிக்கை அளித்துள்ளது. 

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் தேதி முன் கூட்டியே கசிந்ததாக கூறி அது பற்றி ஆய்வு செய்ய கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. அக்கமிட்டி இன்று அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்தல் தேதிகளை அறிவிக்கும் முன் ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சி அத்தேதிகளை வெளியிட்டதை தகவல் கசிவு என கருத முடியாது என்றும், அதை ஊகம் என்றே கருத வேண்டியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் பல்வேறு தரப்பு தகவல்களையும் கடந்த கால நிகழ்வுகளையும் வைத்து முடிவுக்கு வந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தேர்தல் தகவல் ரகசியம் காப்பது தொடர்பான சில தனிப்பட்ட ஆலோசனைகளை தேர்தல் ஆணையத்துடன் பகிர்ந்துகொள்வோம் என்றும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கர்நாடக தேர்தல் தேதிகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் முன்னரே அவை ஆங்கிலத்தொலைக்காட்சியில் வெளியாகி இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close