[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி பேட்டிங்
  • BREAKING-NEWS அவசியம் இருந்தால் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: புக்கத்துறையில் கனிஷ்க் கோல்டு நிறுவனத்தின் ரூ.48 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை
  • BREAKING-NEWS கிராம பஞ்சாயத்து ஊற்று போன்றது; கவனமின்றி இருந்ததால் சாக்கடை கலந்துவிட்டது - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS கூட்டு தேடி அலைய வேண்டிய நிலையில் அதிமுக எப்போதும் இல்லை- நமது அம்மா நாளிதழ்
  • BREAKING-NEWS ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி அணிக்கு 144 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி
  • BREAKING-NEWS மே 2ஆம் தேதி டெல்லி செல்கிறார் தமிழக முதலமைச்சர் பழனிசாமி

‘எங்க வீட்டில் சிறுமி இருக்கிறாள் வராதீங்க’ - பாஜகவுக்கு எதிராக நோட்டீஸ்!

please-bjp-members-don-t-come-10-years-old-girl-child-in-our-home-in-kerala

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் ஆசிஃபா 8 ‌வயது சிறுமி கடந்த ஜனவரி 10 ஆம் தேதி காணாமல் போனாள். காணாமல் போய் ஒரு வாரத்திற்குப்பிறகு ராஸன்னா வனப்பகுதியில் இருந்து சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சிறுமியை ஒரு சிறுவன் உட்பட 8 பேர் சேர்ந்து வழிபாட்டுத்தலம் ஒன்றில் மறைத்து வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது தெரியவந்தது. சிறுமிக்கு உணவு கூட தராமல் மயக்கத்திலேயே வைத்திருந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுமியை மயக்கத்தில் வைத்திருக்க பயன்படுத்திய மருந்தால், இதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்ததும் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்திற்கு இந்திய அளவில் கண்டனக்குரல்கள் எழுந்து வருகின்றன. பலரும் சமூக வலைத்தளங்களில் ஆசிஃபாக்கு நீதி வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர்.

இதில் 18 வயது நிரம்பாத சிறுவனுடன் சேர்ந்து மேலும் 6 பேரும், விசாரணை நடத்தச்சென்ற காவல் அதிகாரி ஒருவரும் சிறுமிக்கு பாலியல் கொடூரத்தை நிகழ்த்தியுள்ளனர். மேலும் பாலியல் கொடூரக்குற்றம் வெளியே தெரியாமல் இருக்க ரத்தக்கறை படிந்த ஆடைகளையும், ஆதாரங்களையும் அழித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அடையாளங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் டெல்லி தடயவியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முக்கிய குற்றவாளியான 18 வயது நிரம்பாத சிறுவன், 8 வயது சிறுமியை அடித்துக்கொலை செய்ததும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. குற்றம் தொடர்பாக 130 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உத்தரபிரதேசத்தின் உன்னாவ் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் மாணவி ஒருவர், தன்னை பாரதிய ஜனதா எம்எல்ஏ மற்றும் அவரது கூட்டாளிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்நிலையத்தில் புகார்‌ அளித்திருந்தார். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால் கடந்த 8ம் தேதி அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டின் அருகே தற்கொலை செய்துகொள்ள முயன்றார். இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வந்த நிலையில், மாணவியின் தந்தை உயிரிழந்தார். 

இதையடுத்து மாணவி தரப்பில் தரப்பட்ட புகாரில் எம்எல்ஏவின் சகோதரரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்குமாறு அம்மாநில அரசு உத்தரவிட்டது. இதற்கிடையில், இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு ஏற்ற அலகாபாத் உயர்நீதிமன்றம், விரைந்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், அதிகாலை அவரை விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். இந்த இரண்டு விவகாரங்களும் இந்திய அளவில் கண்டனக்குரல்களை எழுப்பி வருகின்றன. 

இந்நிலையில் கேரளாவில் சில வீடுகளில் பாஜகவினர் உள்ளே வரவேண்டாம் என பலகையில் எழுதி மாட்டியுள்ளனர். அந்தப் பலகைகளில், ‘இந்த வீட்டில் 10 வயதுக்குட்பட்ட சிறுமி உள்ளார். எனவே பாஜகவினர் வாக்கு சேகரிப்பதாக வரவேண்டாம்.

ஏதேனும் நோட்டீஸ் தரவேண்டுமென்றால், கேட்டின் வெளியே போட்டுவிட்டுச் செல்லவும்’ என எழுதப்பட்டுள்ளது. இதுபோன்ற வாசகங்கள் பல வீடுகளில் எழுதி மாட்டப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் ‘பலாத்காரி ஜனதா பார்ட்டி’ என ஹேஷ்டேக் போட்டு பரப்பப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close