[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

‘என்னுடைய சாவுக்கு மோடி தான் காரணம்’ - விவசாயியின் உருக்கமான தற்கொலை கடிதம்

maharashtra-farmer-kills-self-suicide-note-says-narendra-modi-govt-is-responsible

மகாராஷ்டிராவில் தன்னுடைய மரணத்திற்கு மோடி தான் காரணம் என்று எழுதிவிட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த விவசாயிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தற்கொலை கடிதத்தில், ’தான் இத்தகைய முடிவை எடுப்பதற்கு இவர்கள் தான் காரணம் என்று மோடி உள்ளிட்டவர்களின் பெயரை’ குறிப்பிட்டுள்ளார். அதேபோல் மோடி தலைமையிலான அரசாங்கத்தையும் குறிப்பிட்டுள்ள அவர் தன்னுடைய குடும்பத்திற்கு உதவுமாறு வலியுறுத்தியுள்ளார். ‘எனக்கு கடன் சுமை அதிகமாகிவிட்டது. அதனால், நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். பிரதமர் மோடி தான் என்னுடைய மரணத்திற்கு பொறுப்பு’ என்று தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டு பக்கம் கொண்ட அவரது தற்கொலை கடிதத்தை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த கடிதத்தில் பிரதமர் மோடி உட்பட அரசு அதிகாரிகள், எம்.பிக்கள்., எம்.எல்.ஏக்கள், மாநில அமைச்சர்கள் அனைவரையும் குறிப்பிட்டுள்ளார். 

மகாராஷ்டிர மாநிலம் யவட்மால் மாவட்டம் ராஜுர்வாடி கிராமத்தைச் சேர்ந்த அந்த விவசாயி ஷங்கர் பாவுராவ் சய்ரே(50) விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர். மோடி வர வேண்டும் அல்லது மாநில அரசு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். பாவ்ராவுக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அதில் ஒரு மகளுக்கு மட்டும் திருமணம் ஆகியுள்ளது.

பாவ்ராவ் தன்னுடைய நிலத்தில் பருத்தி பயிரிட்டுள்ளார். ஆனால் பூச்சு தாக்குதலால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. அவர் கூட்டுறவு வங்கியில் ரூ.90 ஆயிரம் மற்றும் தனியாரிடம் ரூ.3 லட்சம் கடனாக வாங்கியிருந்தார். பருத்தி வீணானதால் ஏற்பட்ட பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் அவர் மனமுடைந்துள்ளார். திங்கட்கிழமை காலை தனது விவசாய நிலத்தில் வைத்திருந்த பூச்சு மருத்தினை குடித்து உயிரினை விட்டுள்ளார்.

                   

விதர்பா பகுதி முழுவதும் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அரசின் கவனத்தை ஈர்க்க விவசாயிகள் கடந்த மாரச் 19ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close