[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS சென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை
  • BREAKING-NEWS சென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்
  • BREAKING-NEWS சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது
  • BREAKING-NEWS புதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்

பிரதமர் மோடி நாளை உண்ணாவிரதம்?

pm-modi-tomorrow-hunger-strike-protest

பட்ஜெட் கூட்டத்தொடரில் நாடாளுமன்றம் முடக்கப்பட்டதை கண்டித்து பாஜக எம்.பி.க்கள் நாளை உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர். பிரதமர் மோடியும் நாளை உண்ணாவிரதம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளால் தொடர்ச்சியாக முடக்கப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை முடக்கினார்கள். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி தெலுங்குதேசம் கட்சி உள்ளிட்டவை அமளியில் ஈடுபட்டன. இதனால் மக்களவை, மாநிலங்களவை முழுவதும் முடங்கின. ‌நாடாளுமன்ற கூட்டத்தொடர் எந்த பணியும் செய்யாமலேயே முடிவடைந்துள்ள நிலையில் நாடாளுமன்றம் முடங்கியதற்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என பாரதிய ஜனதா குற்றம்சாட்டி வருகிறது. இதனிடையே நாடாளுமன்ற முடக்கத்துக்கு எதிராக பாஜக எம்பிக்கள் ஏப்ரல் 12-ம் தேதி உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

அதன்படி, பாஜக எம்.பி.க்கள் அனைவரும் நாளை அவரவர்கள் தொகுதியில் உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர். அதைபோல பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் உண்ணாவிரதம் கடைபிடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, தினசரி பணிகள் பாதிக்காத வகையில்தான் பிரதமர் மோடியின் உண்ணாவிரதம் இருக்கும் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close