[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

‘வாரியமோ’, ‘ஆணையமோ’ பெயர் முக்கியமல்ல: நீர் வளத்துறை செயலாளர் சூசகம்

union-water-resources-secretary-upendra-prasad-singh-talked-about-scheme-works

150 ஆண்டுகளாக நீடிக்கும் காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்னையில் சிறப்பான தீர்வை ஏற்படுத்தக்கூடிய அமைப்பை ஏற்படுத்தவே மத்திய அரசு முயற்சிப்பதாக மத்திய நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி. சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் புதிய தலைமுறை செய்தியாளரின் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

யு.பி.சிங் கூறுகையில், “வாரியமோ, ஆணையமோ பெயர் முக்கியமல்ல, அதை சிறந்த தீர்வாக ஏற்படுத்த வேண்டியதே முக்கியம். 150 ஆண்டுகளாக நீடிக்கும் காவிரி பிரச்னையைத் தீர்க்க உறுதியான அமைப்பை ஏற்படுத்த உச்சநீதிமன்றம் செயல் திட்டத்தை அளிக்க உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், எந்த ஒரு மாநில நலனுக்கும் பாரபட்சமாக இல்லாமல் இருக்க உத்தரவிட்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் பகிர்ந்து கொண்டு மே 3ஆம் தேதிக்குள் செயல் திட்டம் அளிக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதன்பிறகு உச்சநீதிமன்றம் தனது இறுதி ஒப்புதலை அளிக்கும்” என்றார்.

இதனிடையே நீர்வளத்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் கூறுகையில்,  “உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்ததும், காவிரி விவகாரம் தொடர்பாக 4 மாநில தலைமைச் செயலாளர்களை அழைத்து ஆலோசித்தோம். நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நீர்ப் பங்கீடுக்கான செயல் திட்டம் வகுக்கும் பணிகள் நடைபெறுகின்றன. உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை அளித்திருக்கிறது. அதில் மே 3ஆம் தேதிக்குள் செயல் திட்டத்தை அளிக்கக் கூறியிருக்கிறது. அந்தப் பணிகள் நடக்கின்றன” என்று தெரிவித்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close