[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

பெண்கள் பொருட்கள் அல்ல அவர்களை கட்டாயப்படுத்த முடியாது : நீதிமன்றம் அதிரடி

supreme-court-says-wife-not-a-chattel-husband-can-t-force-her-to-live-with-him

பெண்கள் ஒன்றும் பொருட்கள் அல்ல, ஆண்கள் அவர்களை கட்டாயப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.இளம்பெண் ஒருவர் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த அதிரடி தீர்ப்பை கூறியுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் இளம்பெண் ஒருவர் தாக்கல் செய்த மனுவில்,  தனது கணவருடன் வாழ விருப்பம் இல்லை எனவும் தன் கணவர் தன்னுடன் வாழும்படி கட்டாயப்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோகுர், தீபக் குப்தா அடங்கிய அமர்வு முன் வந்தது.

‘பெண்ணை எப்படி ஒரு பொருள் போன்று நடத்த முடியும். விருப்பம் இல்லாத பட்சத்தில், மனைவியை, தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என எப்படி கட்டாயப்படுத்த முடியும்?’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அவர்கள் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதற்கிடையில் அந்தப் பெண் தரப்பில், தனது கணவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. கணவருக்கு எதிரான கிரிமினல் வழக்கை திரும்பப்பெற தயார். அவரிடம் எந்த ஜீவனாம்சமும் எதிர்பார்க்கவில்லை. அவருடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என கூறப்பட்டது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close