[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

காவிரி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

cauvery-issue-trial-in-supreme-court-today

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கும், உச்சநீதிமன்ற தீர்ப்பில் இடம்பெற்றுள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவும் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

காவிரி விவகாரத்தில் இறுதி தீர்ப்பு அளித்த உச்சநீதிமன்றம் மார்ச் மாதம் 29ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என உத்தரவிட்டிருந்தது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு கர்நாடகா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. உச்சநீதிமன்றத் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தை இடம்பெறவில்லை என கர்நாடகா கூறியது. காவிரி மேலாண்மை வாரியம் அமைவது குறித்து மத்திய அமைச்சர்களும் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்தனர். இந்த நிலையில் கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு முடிவடைந்தவுடன் தமிழக அரசின் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைப்பது உறுதி செய்யப்படும் என தெரிவித்தது. 

இதற்கிடையில் மத்திய அரசு விளக்கம் கோரி ஒரு மனுவை தாக்கல் செய்தது. கர்நாடகாவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இறுதித் தீர்ப்பில் இடம்பெற்றுள்ள ஸ்கீம் என்பதன்படி காவிரி மேலாண்மை வாரியமே அமைக்கப்படவேண்டுமா அல்லது நிர்வாக, தொழில்நுட்ப குழுவாக அமைக்கமுடியுமா என்று மத்திய அரசு கேட்டிருந்தது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கூடாது என தமிழக அரசு வாதிட்டது. எனினும் மத்திய அரசின் மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் இரு வழக்குகளையும் இன்று விசாரிப்பதாக தெரிவித்திருந்தது.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close