[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விருதுநகர்: அருப்புக்கோட்டையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை
  • BREAKING-NEWS வன்கொடுமை சட்டத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சென்னையில் 200 க்கும் மேற்பட்டோர் பேரணி
  • BREAKING-NEWS தமிழத்தில் எல்லாவித தூசிகளும் தட்டப்பட்டு காணாமல்போன குப்பை விஜயகாந்த்- அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS செம்பரபாக்கம் ஏரிக்கு திறக்கப்படும் நீரின் அளவு 443 கன அடியில் இருந்து 593 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS காங்கிரசுடன் பலஆண்டுகள் கூட்டணியில் இருந்தபோது காவிரி பிரச்னையை திமுக ஏன் தீர்க்கவில்லை?- தமிழிசை
  • BREAKING-NEWS மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்தால் சேதமடைந்த ஆயிரங்கால் மண்டபம் மீண்டும் திறப்பு
  • BREAKING-NEWS அணு ஆயுத சோதனை நிறுத்திவைக்கப்படும் என்ற வடகொரிய அதிபரின் அறிவிப்புக்கு ட்ரம்ப் வரவேற்பு

உ.பி.யில் முதல்வர் இல்லம் முன்பு இளம்பெண் தற்கொலை முயற்சி

woman-attempts-suicide-outside-up-cm-yogi-adityanath-s-residence-alleges-rape-by-bjp-mla

உத்தரப்பிரதேசம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இல்லம் முன்பு இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் அம்மாநில முதலமைச்சர் ஆதித்யநாத் யோகி இல்லம் முன்பு தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கு முதலமைச்சர் பாதுகாப்புக்கு இருந்த காவலர்கள் அவர்களை தடுத்தனர். இதுகுறித்து அந்தப்பெண் கூறுகையில்  “பாஜக எம்எல்ஏ மற்றும் அவரது கூட்டாளிகள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவித்தார். மேலும் அந்த நபர்கள் தங்கள் குடும்பத்தினரை மிரட்டுவதாக கூறினார். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்ற போதும் மிரட்டப்பட்டேன். அவர்கள் அனைவருக்கும் தண்டனை பெற்று தரவேண்டும். இல்லையென்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன்” எனக் கூறினார்.

தற்போது இவ்விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளார். இதுதரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்ட பிறகு முழுமையான விவரங்கள் தெரிய வரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close