[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

போலீசிடம் மல்லுகட்டும் போதைப் பெண்: வைரலாகும் வீடியோ!

a-woman-created-ruckus-pelted-stones-at-media-personnel

மதுபோதையில் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடும் பெண் ஒருவர், மீடியாவினரை கல்லால் விரட்டி விரட்டி தாக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஐதராபாத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் ஒன்று, ஜூப்ளி ஹில்ஸ். இங்கு பல திரைப்பட ஸ்டூடியோக்கள் உள்ளன. சில முன்னணி நடிகர்களின் வீடுகளும் இங்கு உள்ளன. இங்கு நேற்று இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண் டிருந்தனர்.

அப்போது வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தினர். காரை ஓட்டி வந்தவர் மது போதையில் இருந்தது தெரிய வந்தது. அளவுக்கு அதிகமாக குடித்திருந்ததால் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய போலீசார் முடிவு செய்தனர். அப்போது அதே காரில் இருந்த ஒரு மாடர்ன் பெண், இறங்கி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரும் மது போதையில் இருந்ததால் போலீசார், மெதுவாக பேசிக்கொண்டிருந்தனர். அப்போது மீடியாவினர் சிலர் அந்த சம்பவத்தை வீடியோ எடுத்தனர்.

இதைக் கண்ட அந்தப் பெண், ரோட்டில் கிடந்த கல்லை எடுத்து மீடியாவினரை நோக்கி எறிந்தார். பிறகு விரட்டி விரட்டி எறியத் தொடங்கினார். போலீசார் அந்தப் பெண்ணை எச்சரித்தனர். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகிவருகிறது. அந்தப் பெண் யாரென்று போலீசார் விசாரித்து வருகின்றனர். 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close