[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்
  • BREAKING-NEWS வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
  • BREAKING-NEWS தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS பட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.

சல்மானுக்கு தண்டனை வழங்கிய நீதிபதி திடீர் மாற்றம்!

judge-hearing-salman-khan-bail-request-among-87-transferred-in-rajasthan

மான்வேட்டை வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு தண்டனை வழங்கிய நீதிபதி உட்பட பலர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ’ஹம் சாத் சாத் ஹைன்’ என்ற இந்திப் படத்தின் ஷூட்டிங்கில், 1998 ஆம் ஆண்டு பங்கேற்றிருந்தார் சல்மான் கான். அவருடன் நடிகர் சைஃப் அலிகான், நடிகைகள் நீலம், சோனாலி பிந்த்ரே, தபு உள்ளிட்ட 5 பேர் ஜீப்பில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு தென்பட்ட அரிய வகையைச் சேர்ந்த 2 மான்களை சல்மான்கான் சுட்டுக்கொன்றதா‌க புகார் எழுந்தது.

இது தொடர்பான வழக்கு 20 ஆண்டுகளாக நீண்டு கொண்டிருந்த நிலையில், கடந்த மார்ச் 28 ஆம் தேதி இறுதிவாதங்கள் நிறைவடைந்தது. நேற்று முன் தினம் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து அவர் ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சல்மான் கான் தனக்கு ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனு மீது நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளது. 

இந்நிலையில் சல்மான்கானுக்கு சிறை தண்டனை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிபதி தேவ்குமார் கத்ரி, திடீரென இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு பதிலாக சம்ரேந்திரா சிங் சிகார்வர்  நியமிக்கப் பட்டுள்ளார். 

ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் மொத்தம் 87 நீதிபதிகளை இடமாற்றம் செய்துள்ளது. வழக்கமாக ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் 30 தேதி வரையில் ராஜஸ்தானில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படுவதும் வழக்கம். ஆனால், இம்முறை முன்கூட்டியே இடமாற்றம் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close