[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி அணிக்கு 144 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி
  • BREAKING-NEWS மே 2ஆம் தேதி டெல்லி செல்கிறார் தமிழக முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS பெண் பத்திரிகையாளர்கள் விவகாரத்தில் எஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு நன்மை செய்யக்கூடிய இரட்டைக்குழல் துப்பாக்கி அதிமுக- பாஜக இல்லை - கனிமொழி
  • BREAKING-NEWS காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திமுக, தோழமை கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம்
  • BREAKING-NEWS ஊழலை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்தது திமுக அரசுதான்- அமைச்சர் ஜெயக்குமார்

நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை!

blackbuck-poaching-case-salman-gets-5-years

மான்வேட்டை வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை அளித்து ஜோத்பூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

பிரபல இந்தி நட்சத்திரங்கள் சல்மான் கான், சைஃப் அலிகான், நடிகை தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர் 1998 ஆம் ஆண்டு, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடந்த ’ஹம் சாத் சாத் ஹே’ என்ற இந்தி படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டனர். அப்போது, அங்குள்ள காட்டில் வேட்டைக்குச் சென்றனர். இதில் அரிய வகை மான்களை, நடிகர் சல்மான்கான் வேட்டையாடியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் உட்பட 7 பேர் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

கடந்த 20 ஆண்டுகள் இந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டது. கடந்த மார்ச் 28-ம் தேதி நடந்த வழக்கு விசாரணையின்போது அனைத்து சாட்சியங்களும், விசாரணைகளும் நிறைவடைந்ததாகக் கூறப் பட்டது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேவ்குமார் காத்ரி ஒத்தி வைத்தார். தீர்ப்பு இன்று வெளியாவதாகக் கூறப்பட்டது.

 இதையொட்டி பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான், சைஃப் அலிகான், தபு உள்ளிட்டோர் கோர்ட்டில் இன்று ஆஜராகி இருந்தனர். பின்னர் தீர்ப்பளித்த நீதிபதி, இந்த வழக்கில் சல்மான் கான் குற்றவாளி என அறிவித்தார். வழக்கில் இருந்து சைஃப் அலிகான், தபு, சோனாலி உட்பட 5 பேர் விடுவிக்கப்பட்டனர். தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close