கேரளத்தில் இருக்கும் பேராசிரியர்களுக்கு என்ன ஆனது என தெரியவில்லை. கடந்த சில மாதமாகவே சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். கேரளாவில் ஃபரூக் கல்லூரியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் டி ஜவ்ஹர் முனாவிர். இவர் இஸ்லாமிய மாணவிகள் ஆடை, மார்பகங்கள் குறித்து தவறாக பேசியது சர்ச்சையானது.
இப்போது கேரள மாநிலம் கல்லடியில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணி புரிபவர் ரஜித் குமார். இவர் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது 'ஒரு பெண், ஆண் போல உடை அணிந்தால், அவளுக்கு பிறக்கும் குழந்தை எப்படி இருக்கும் ? அந்தக் குழந்தைக்கு என்ன மாதிரியான குணம் இருக்கும் ? நிச்சயமாக அவளுக்கு பிறக்கும் குழந்தை திருநங்கை குணம் கொண்டதாகவே இருக்கும்' என்று சர்ச்சையாக பேசியுள்ளார். ரஜித் குமார் இன்னும் ஒருபடி சென்று 'கேரளாவில் ஏற்கெனவே 6 லட்சம் திருநங்கைகள் இருக்கிறார்கள். இப்போது, இங்குள்ள பெண்கள் எல்லாம் ஜீன்ஸ் அணிகிறார்கள். பின்பு, எப்படி ஆரோக்கியமான குழந்தை பிறக்கும். திருநங்கை குணம் கொண்ட குழந்தைதான் பிறக்கும். மேலும் புரட்சி செய்யும் ஆண்களை மணமுடிக்கும் பெண்களுக்கு ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது' என்று அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து பேசியுள்ளார். ரஜித் குமாரின் இந்தப் பேச்சு பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.இதனையடுத்து பேராசிரியர் ரஜித் குமார் மீது வழக்குக் தொடர கேரள அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நிர்மலா தேவி விவகாரம்: உதவி பேராசிரியர் முருகன் கைது
தமிழ் மொழியில் ரயில் டிக்கெட்: பயணிகள் மகிழ்ச்சி
காவிரியை விட மெரினா முக்கியமா?: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
பிரிட்டன் இளவரசர்- கேத் தம்பதிக்கு 3-வது குழந்தை: தாயும், சேயும் நலம்
பெண் சிசுவை பாலினம் பார்த்து அழித்த மருத்துவர் கைது: இளம்பெண் உயிரிழப்பு
மறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை ! சச்சினின் கிளாஸான இன்னிங்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்