[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

தூங்கிய குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடிய குரங்கு: தவிக்கும் தனிப்படை!

monkey-steals-16-day-old-baby-rescue-operation-launched

பிறந்து 16 நாளே ஆன குழந்தையை தூக்கிக்கொண்டு குரங்கு ஒன்று காட்டுக்குள் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ளது, தலபஸ்தா என்ற கிராமம். இங்கு குரங்குகள் தொல்லை அதிகம். அடிக்கடி ஊருக்குள் வந்து எதையாவது தூக்கிச் செல்லும் குரங்குகளை, கிராமத்தினர் விரட்டி அடிப்பது வழக்கம். இதன் காரணமாக சிலரை கடித்துக் குதறியிருக்கிறது குரங்குகள். இதுபற்றி வனத்துறையினரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லையாம். 

இந்நிலையில் இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணா நாயக் என்பவர் மனைவிக்கு 16 நாட்களுக்கு முன் ஆண்குழந்தை பிறந்துள்ளது. மகனை கொஞ்சி மகிழும் நாயக், நேற்றும் அப்படி கொஞ்சிவிட்டு வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தார். அவர் மனைவி குழந்தையுடன் படுத்திருந்தார். பின்னர் எழுந்து முகம் கழுவச் சென்றார், மனைவி. அப்போது ஜாலியாக அங்கு வந்த குரங்கு, குழந்தையைப் பார்த்தது. பிறகு என்ன நினைத்ததோ, அதை அப்படியே தூக்கிக்கொண்டு ஓடியது. இதைப் பார்த்த நாயக் மனைவி கூச்சல் போட்டார். ஆனால் குரங்கு பாய்ந்து காட்டுக்குள் சென்றுவிட்டது.

பின்னர் பதறிய குடும்பம், அக்கம் பக்கத்து வீட்டினருடன் சென்று வன அலுவலகத்தில் புகார் செய்தது. அவர்கள் மூன்று தனி டீமை அமைத்து குழந்தையை தேடி வருகின்றனர். இன்னும் தேடி வருவதாக வன அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தை எப்படியாவது கிடைக்க வேண்டும் என்று நாயக் குடும்பத்தினர் வீட்டின் முன் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : MonkeyRescue16-day-old babyகுரங்கு
Advertisement:
Advertisement:
[X] Close