[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

மேற்கு வங்கத்தில் 5ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு: ஆர்வமுடன் மக்கள் வாக்களிப்பு

phase-v-of-west-bengal-polls-20-voters-turn-out-till-9-am

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான ஐந்தாம் கட்டத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

தெற்கு 24 பர்கானா, தெற்கு கொல்கத்தா மற்றும் ஹூக்ளி மாவட்டங்களில் அடங்கும் 53 தொகுதிகளில் வாக்குப் பதிவு, காலை 7‌ மணிக்கு தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவின்போது வன்முறை நடைபெறாமல் தடுக்க மத்திய, மாநில காவல் படைகளைச் சேர்ந்த 90,000 வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தத் தேர்தலில் 43 பெண்கள் உள்பட 349 பேர் போட்டியிடுகின்றனர். பவானிப்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து‌ காங்கிரஸ் சார்பில் மத்திய முன்னாள் அமைச்சர் தீபா தாஸ்முன்ஷியும், பாரதிய ஜனதா சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பேரன் சந்திர குமார் போஸூம் களம் காண்கின்றனர். இதனிடையே, தெற்கு கொல்கத்தாவில் 14 வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close