[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வாகன ஓட்டு‌நர் உ‌ரிமம் பெறுவதற்கான குறைந்த‌பட்ச கல்வி தகுதியை அடியோடு நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு ‌செய்துள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆந்திர போலீஸாருக்கு இன்று முதல் வார விடுமுறை அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
  • BREAKING-NEWS மக்களவை சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஓம் பிர்லா எம்.பி. போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
  • BREAKING-NEWS தேர்தல் தோல்வியை அடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்கிரஸ் கட்சி

மகனுடன் தேர்வு எழுதும் அம்மா: பஞ்சாபில் ஒரு அம்மா கணக்கு

ludhiana-mother-appears-for-class-10-examination-with-son

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகனுடன் 10 வகுப்பு தேர்வு எழுத தயாராகி வருகிறார்.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்தவர் ரஜினி பாலா (44 வயது). இவர்  கடந்த 1989 ஆம் ஆண்டு தனது 9 ஆம் வகுப்பை முடித்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக கல்வியை தொடர முடியாததால் அவர் திருமணம் செய்து கொண்டார். எனினும் 10 ஆம் வகுப்பை படிக்க வேண்டும் என்ற தணியாத தாகம் கொண்டிருந்த ரஜினி பாலா, அதற்காக தனது மகனுடன் இணைந்து பள்ளிக்குச் சென்று படித்து வருகிறார்.

இதுதொடர்பாக ரஜினி பாலா கூறுகையில், “ எனது கணவர் கடந்த சில வருடங்களாகவே படிக்க சொல்லி வந்தார். ஆனால் ஆரம்பத்தில் நான் அதை மறுத்து வந்தேன். என்னால் எப்படி முடியும். நான் மூன்று குழந்தைகளுக்கு தாயாக உள்ளேன். அதுமட்டுமின்றி இங்குள்ள மருத்துவமனையில் வார்ட் அட்டண்டராக பணிபுரிந்து வருகிறேன். நாளடைவில் தான் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். இந்தக்காலத்தில் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பாவது படித்திருக்க வேண்டும். இதனையடுத்து தற்போது எனது மகனுடன் பள்ளிக்கு சென்று வருகிறேன்.

நான் கல்வியை தொடர்வதற்கு எனது மாமியார், கணவரின் ஊக்கமே காரணம். எனது மாமியார் படிப்பறிவு இல்லாதவர் ஆனால் அவர் தான் என்னை ஊக்கப்படுத்தினார். எனது கணவர் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்து வருகிறார். எங்களை தினமும் காலை நேரமாக எழுப்பிவிடுவார். அவர்தான் எனக்கு எங்கள் குழந்தைகளுக்கும் பாடங்களை சொல்லித்தருவார் எனக் கூறினார்.

இதுதொடர்பாக அவரது கணவர் ராஜ்குமார் சதி கூறுகையில்,  “நானே எனது படிப்பை 17 வருட இடைவெளியில் தான் முடித்தேன். என்னால் முடியும் போது எனது மனைவியால முடியாதா என நினைத்தேன். படிப்பதற்காக நானே அவர்களை காலையில் எழுப்பிவிடுவேன். எனது மனைவி மற்றும் மகன் இருவரும் ஒன்றாக தான் பள்ளிக்கு செல்வார்கள். டியூசனுக்கும் ஒன்றாகத்தான் செல்வார்கள் இது அவளுக்கு மிகவும் உதவியாக இருந்தது” எனத் தெரிவித்தார்.


 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close