[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

பக்கத்தில் இருப்பவனை பார்க்காதே அவனுக்கும் ஒன்றும் தெரியாது: வைரலான வினாத்தாள்

dental-exams-question-paper-viral-in-social-media

மும்பையில் உள்ள தனியார் பல் மருத்துவக்கல்லூரியில் மாணவர்களுக்கான தேர்வு நடைப்பெற்று வருகிறது. மார்ச் 26ஆம் தேதி பொது சுகாதாரம் தேர்வு நடைப்பெற்றது. இந்தத் தேர்வுக்கு சென்ற மாணவர்களிடம் வினாத்தாள் வழங்கப்பட்டது. அதில் அறிவுறுத்தல் என்று 4 குறிப்புகள் எழுதப்பட்டிருந்தன. இதனைப்படித்த மாணவர்கள் சிரிப்பலையில் மூழ்கினர். 

அவை:
 1) நீங்கள் ஒரு பல் மருத்துவராக பயிற்றுவிக்கப்படுகிறீர்கள். கதை சொல்பர்களாக அல்ல; பதில்களை மிகச்சுறுக்கமாக அளித்தால் போதும்.
 2) உங்கள் நண்பன் அதிக பக்கங்களில் விடையளிக்கிறார் என பதட்டப்பட வேண்டாம். நீங்கள் பதட்டம் அடைய வேண்டும் என்பதற்காகவே     அவ்வாறு அவன் செய்கிறான்.
 3) உங்கள் அருகில் அமர்ந்திருப்பவரை பார்த்து தேவையில்லாமல் சிரிக்க வேண்டாம்; ஏனென்றால் அவருக்கும் பதில் தெரியாது. 
 4) வாழ்க்கையில் உங்களுக்கு ஏராளமான தேர்வுகள் இருக்கும் ஆனால் இங்கு கேட்கப்பட்டிருக்கும் அனைத்து கேள்விகளும் கட்டாயம்   பதிலளிக்கவும் என எழுதப்பட்டிருந்தது. 

தற்போது இந்த வினாத்தாள் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

இந்த வினாத்தாளை தயாரித்த பேராசிரியர் டாக்டர் அமித் சௌத்ரி கூறுகையில், தேர்வு நேரங்களில் பெரும்பாலான மாணவர்கள் பதட்டமாகவும், மன அழுத்தத்துடனும் காணப்படுகின்றனர். வழக்கம் போல் வினாத்தாளில் வழங்கப்படும் அறிவுரைகளை தவிர்த்து இதுபோன்று நகைச்சுவையாக ஏதாவது எழுதினால் மாணவர்களுக்கு மன இறுக்கம் குறைந்து தேர்வு எழுத நல்ல மனநிலை ஏற்படும் என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close