[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

தேர்தல் ஆணைய அறிவிப்புக்கு முன் தேர்தல் தேதியை ட்விட் செய்த பாஜக பிரமுகர்

bjp-leader-who-has-tweeted-the-election-date-before-the-election-commission-notice

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு முன் கர்நாடக தேர்தல் தேதியை ட்வீட் செய்து பாஜக பிரமுகர் ஒருவர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனை தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் காலை 11மணிக்கு அறிவிப்பார் எனவும் கூறப்பட்டது.அதன்படி தலைமை தேர்தல் ஆணையர் 11மணிக்கு செய்தியாளர்களை சந்தித்தார். தேர்தலையொட்டி என்னென்ன நடைமுறைகள் பின்பற்ற வேண்டும் என தெரிவித்திக்கொண்டிருந்தார். தேர்தல் தேதி குறித்து அவர் அப்போது எதுவும் கூறவில்லை. இந்நிலையில் ட்விட்டரில் மே12ஆம் தேதி கர்நாடகத்தில் தேர்தல் என்ற செய்து வலம் வந்துக்கொண்டிருந்தது. இதனை பாஜகவின் இணையதள அணியை சேர்ந்த அமித் மால்வியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். கர்நாடகாவில் மே12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை மே18 எனப் பதிவிட்டிருந்தார்.சிறிது நேரத்தில் அவரது  பதிவு ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது.

மே12ஆம் தேதி கர்நாடகாவில் தேர்தல் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே15ல் நடைபெறும் என தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.  தேர்தல் ஆணையம் என்பது ஒரு சுதந்திர அமைப்பு அது தன்னிச்சையாக செயல்படக்கூடியது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு முன் பாஜக பிரமுகர் ஒருவர் தேர்தல் தேதியை தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலின் போது வாக்குப் பதிவு இயந்திரத்தின் மூலம் பாஜக முறைகேடு செய்து வெற்றி பெறுகிறது என எதிர்க்கட்சிகளால் குற்றஞ்சாட்டப்படுகிறது.இந்நிலையில் தேர்தல் குறித்த அமித் மால்வியாவின் ட்வீட் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close